karthigai Deepam: அசிங்கப்படுத்திய சந்திரகலா.. காணாமல் போன மயில்வாகனம் - கார்த்திகை தீபத்தில் பரபரப்பு!
கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா அவமானப்படுத்தியதால், மயில்வாகனம் வீட்டை விட்டு காணாமல் போனதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலா மயில் வாகனத்தை தண்டசோறு என பேசி அவமானப்படுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மயில்வாகனத்தை தேற்றும் கார்த்திக்:
அதாவது மயில் வாகனம் மனம் நொந்து போய் சாப்பிடாமல் எழுந்து வெளியே செல்ல, "எப்படி எல்லாம் பேசறாங்க பாரு அவங்க சொல்றதும் சரிதானே" என எமோஷனலாக பேசி வருத்தப்படுகிறான். "இனிமே என்னால இந்த வீட்ல சும்மா இருக்க முடியாது, நானும் ஏதாவது வேலைக்கு போக போறேன்" என சொல்கிறான்.
அடுத்ததாக கார்த்திக் வீட்டுக்கு வர ரேவதி நடந்த விஷயங்களை சொல்கிறாள். "நீங்க போய் பேசுங்க" என்று சொல்ல, கார்த்திக் இந்த விஷயத்தை என்கிட்ட விட்டு விடு இத வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என சொல்கிறார்.
காணாமல் போன மயில்வாகனம்:
பிறகு மயில் வாகனம் ரோகிணி இடம் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட அந்த பக்கமாக வந்த சாமுண்டீஸ்வரி" என் தங்கச்சி பேசினதுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று சொல்ல மயில்வாகனம் அத்தை என்கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்காதீங்க விடுங்க பாத்துக்கலாம் என்று சொல்கிறான்.
அடுத்த நாள் மயில்வாகனம் வீட்டில் இருந்து காணாமல் போக அனைவரும் பதற்றமாகி அவரை தேட தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























