Karthigai Deepam: மாட்டிக்கொண்ட சிவனாண்டி.. நவீனைத் தேடு்ம் துர்கா - கார்த்திகைத் தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் நவீனை கார்த்திக் தேடும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நவீனைத் தேடி வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நவீனைத் தேடும் கார்த்திக்:
அதாவது, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் நவீனை தேடி வருகின்றனர், ஆனால் நவீனை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. கார்த்திக் கண்டிப்பாக பள்ளம் தோண்ட கடப்பாரை, மம்முட்டியை பயன்படுத்தி இருப்பாங்க என்று சொல்லி எதாவது கிடைக்கிறதா என்று தேடுகிறான்.
பிறகு அங்கு இது சார்ந்த வேலைகளை செய்யும் குமேரசன் என்பவரை சந்தித்து விசாரிக்க ஒரு கும்பல் 5000 கொடுத்து பொருட்களை வாங்கி சென்றதாக சொல்கிறார். மேலும் அதில் ஒருவனின் பெயர் குமார் எனவும் சொல்கிறான்.
உயிர் பிழைத்த துர்கா:
அந்த குமாரை தேடி கண்டுபிடித்து அடித்து விசாரிக்க அவன் நவீன் புதைக்கப்பட்ட இடத்தை காட்டுகிறான். பிறகு கார்த்திக் நவீனை காப்பாற்றுகிறான். பிறகு நவீனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்து துர்காவிடம் பேச வைத்து அவளையும் காப்பாற்றுகிறான்.
உண்மையை கண்டுபிடித்த சிவனாண்டி:
அடுத்து கார்த்திக் நவீனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வர அவன் இதுக்கும் சாமுண்டீஸ்வரி அத்தைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்னை கொல்ல முயற்சி செய்தது சிவனாண்டி தான் என்று வாக்குமூலம் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















