Karthigai Deepam: துர்கா - நவீன் திடீர் ரகசிய திருமணம்! கார்த்திக் செய்த காரியம் என்ன?
துர்காவிற்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளை சாமுண்டீஸ்வரி நடத்திக் கொண்டிருக்க துர்கா திடீரென நவீனை திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி துர்காவிற்கு மாப்பிள்ளை பார்த்திருக்க துர்கா நவீனிடம் விஷயத்தை சொல்ல அவன் கோவிலில் காத்திருப்பதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நவீனைத் திருமணம் செய்த துர்கா:
அதாவது நவீன் கோவிலில் காத்திருக்க துர்கா வீட்டுக்கு தெரியாமல் கிளம்பி வருகிறாள். வீட்டில் துர்காவின் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடக்க அவளை காணாததால் எல்லோரும் தேடத் தொடங்குகின்றனர். கார்த்திக் துர்காவை தேடி கோவிலுக்கு வருகிறான்.
அதற்குள் கோவிலில் நவீன் துர்காவும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதைப் பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். மேலும் இப்போதைக்கு இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்கிறான்.
உண்மையை மறைத்த கார்த்திக்:
துர்கா கோவிலில் இருப்பதாக சாமுண்டீஸ்வரிக்கு தகவல் கொடுக்கும் கார்த்திக் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறான். ரேவதியிடம் துர்கா, நவீன் திருமணம் செய்து கொண்ட விஷயத்தை சொல்கிறான். மேலும் இப்போதைக்கு வீட்டில் சொல்ல வேண்டாம் சரியான நேரம் பார்த்து உண்மையை சொல்லி விடலாம் என்று சொல்கிறான்.
மேலும் துர்காவிடம் ஏன் இப்படி பண்ண? கொஞ்சம் பொறுமையா இரு.. நேரம் பார்த்து உண்மையை சொல்லலாம் என்று சமாதானம் செய்கிறான். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















