Karthigai Deepam: லவ் பண்றேனு சொல்லிடுங்க.. மனைவிக்கு ஐடியா கொடுத்த கணவன் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ஒரு நகை கடைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கடையில் ஒரு தாலி டிசைன் காட்டி இதுபோல தாலி வேண்டும் என்று சொன்னால் இதே மாதிரி கிடைக்கும் ஆனால் இரண்டு மூன்று நாட்களாகும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள்.
காதலிப்பதாக சொல்ல சொன்ன கார்த்திக்:
பிறகு அவ்வளவு நாள்தான் காத்திருக்க முடியாது உடனடியாக வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்கிறாள். மறுபக்கம் கார்த்திக் மற்றும் ரேவதி ஒன்றாக காரில் வந்து கொண்டிருக்க அந்த வழியாக வந்த மயில்வாகனம் இவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை பார்த்துவிட்டு சரி நீங்க போங்க நான் பார்த்துகிறேன் என்று நடந்து செல்கிறான்.
பிறகு ரேவதி நாம ரெண்டு பேரும் இப்படி ஒன்னா இருக்குறத பாத்தா ஆபீஸ்ல இருக்கீங்க தப்பா பேச வாய்ப்பிருக்கு என்று சொன்னால் கார்த்திக் யாராச்சும் ஏதாச்சு பேசிட்டு போறாங்க.. அதுக்கெல்லாம் கவலை பட கூடாது, யாராச்சும் ஏதாச்சும் கேட்டா காதலிப்பதாக சொல்லுங்க என்று சொல்ல ரேவதி ஷாக்காகிறாள்.
பிறகு ரேவதி என்ன சொல்றீங்க என்று திரும்ப கேட்க கார்த்திக் சரி நான் சொன்னதை மறந்துடுங்க என்று சொல்லி சமாளிக்கிறான். இதை தொடர்ந்து இருவரும் ஜோடியாக ஆபீசுக்கு வர செக்யூரிட்டி ஒரு மாதிரி பார்க்க ரேவதி இதுக்கு தான் ஒன்னா வர வேண்டாம் என்று சொன்னதாக சொல்கிறாள்.
சாமுண்டீஸ்வரியின் திட்டம்:
எங்க வீட்டில் சாமுண்டீஸ்வரி மாலையுடன் தாலியை சேர்த்து வைத்து ரேவதி கழுத்தில் மருது கையால் போட்டுவிட ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்





















