மேலும் அறிய

TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை

TN weather Rain Update: (25-05-2026): தமிழ்நாட்டில் இன்று வடக்கு மற்றும் கொங்கு மண்டலங்களைச் சேர்ந்த 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN weather Rain Update: (25-05-2026): தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான கொங்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை

26-05-2026: கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-05-2026 மற்றும் 28-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை / இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

25-05-2026 முதல் 27-05-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

25-05-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-05-2025 முதல் 28-05-2026 வரை: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

25-05-2026 முதல் 28-05-2026 வரை: கேரளம்-கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget