மேலும் அறிய

PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?

பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாமக தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை தனது கூட்டணியில் இழுத்திருப்பதுடன் இடதுசாரிகளையும் தன்பக்கம் வசப்படுத்தியுள்ளார்.

பாஜக கூட்டணியில் நீடிக்கும் பாமக:

அதிமுக கூட்டணி கவலைக்குரிய நிலையில் உள்ளது. ஆட்சியை அமைக்க தவெக தலைவர் விஜய் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அணுகியபோதும், அதிமுக கூட்டணியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருந்த பாமக-வை அணுகவே இல்லை. அதற்கு விசிக-வும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. 

இந்த சூழலில், பாஜக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ( 2014 சட்டமன்ற தேர்தல் தவிர) தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது பாமக. ஆனால், அவர்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் இருந்ததைக் காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக-வின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அமைச்சரவையில் இடம் கேட்க முடிவு:

இதனால், இனியும் பாஜக கூட்டணியில் தொடர வேண்டுமென்றால் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் இருக்க வேண்டும் என்று பாமக தலைமை கருதுகிறது. இதனால், மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் உள்ள அப்னா தளம், பீகாரில் ள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சிகள் ஒரே ஒரு எம்பி மட்டுமே தங்கள் வசம் வைத்துள்ளனர். அவர்களுக்கு மத்தியில் அமைச்சரவையில் பாஜக இடம் வழங்கியுள்ளது. ஆனால், தங்களுக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் வழங்க மத்திய பாஜக அரசு தயங்குவதாக பாமக-வினர் வருத்தத்தில் உள்ளனர். 

ஒப்புக்கொள்ளுமா பாஜக?

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய போட்டியாக களமிறங்கிய தவெக வரும் உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தலிலும் மிகப்பெரிய பலத்தை காட்டும் என்று கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் வாக்குகள் சிதறியதற்கு பாஜக கூட்டணியும் ஒரு காரணமாக கருதப்படும் சூழலில், இனியும் பாஜக கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் அமைச்சரவையில் இடம் அளித்தால் மட்டுமே தொடரலாம் என்று பாமக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக-வின் இந்த முடிவுக்கு பாஜக பச்சைக் கொடி காட்டுமா? அல்லது தடை விதிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வட தமிழகத்தில் தங்களுக்கு என்று தனிப்பெரும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முக்கிய கட்சிகள் கருதுகின்றனர்.  தற்போது பாமக வசம் 4 எம்எல்ஏ-க்களும் இருப்பதால் அவர்களின் வாக்குவங்கிகளை தக்கவைக்க அன்புமணியின் கோரிக்கையை பாஜக ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
கனிம சட்டத் திருத்தம்: தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கனிம சட்டத் திருத்தம்: தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Seeman: ஆணவத்தின் உச்சம்.. தமிழ் பற்றி தப்பா பேசுவீங்களா? - நிதியமைச்சர் மரிய வில்சனை விளாசிய சீமான்!
Seeman: ஆணவத்தின் உச்சம்.. தமிழ் பற்றி தப்பா பேசுவீங்களா? - நிதியமைச்சர் மரிய வில்சனை விளாசிய சீமான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Embed widget