மேலும் அறிய

IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?

ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் என்னென்ன? எந்தெந்த போட்டி எப்போது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன் அடு்த்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. இந்த தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி, குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில், கடைசியாக உள்ளே செல்லப்போகும் அணியாக ராஜஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. 

ப்ளே ஆஃப் சுற்றில் யார்? யார்?

இந்த தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணி எந்தெந்த அணியுடன் மோதப்போகிறது? எப்போது மோதப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்:

1. ஆர்சிபி - 18 புள்ளிகள்

2. குஜராத் - 18 புள்ளிகள்

3. சன்ரைசர்ஸ் - 18 புள்ளிகள்

4. ராஜஸ்தான் - 16 புள்ளிகள்

ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி முதலிடத்தையும், குஜராத் அணி 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். சன்ரைசர்ஸ் அணி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

ப்ளே ஆஃப் எப்படி?

ஐபிஎல் விதிப்படி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் குவாலிஃபயர் 1 போட்டியில் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பில் அவர்கள் குவாலிஃபயர் 2 போட்டியில் ஆடுவார்கள்.

எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதும். இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும். வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் 2 போட்டியில் ஆட வேண்டும். குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

குவாலிஃபயர் 1:

இந்த தொடரில் குவாலிஃபயர் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றனர். வரும் 26ம் தேதி நாளை மறுநாள் செவ்வாய் கிழமை நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

எலிமினேட்டர்:

வரும் 27ம் தேதி சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ஹைதராபாத்  அணி 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.  வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் 2க்கு தகுதி பெறும். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

குவாலிஃபயர் 2:

வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை குவாலிஃபயர் 2 போட்டியில் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வி அடையும் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும் மோதுவார்கள். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இறுதிப்போட்டி:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்ற அணியும், குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோதுவார்கள். ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டி வரும் 31ம் தேதி ஞாயிறு அன்று 7.30 மணிக்கு நடக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget