Karthigai Deepam: உயிரைக் காப்பாற்றிய புருஷனுக்கு டோஸ் விட்ட மனைவி! நல்லவள் வேஷம் போடும் மாயா!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாயா ரேவதியை கொலை செய்ய சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது? என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்:
அதாவது ரேவதி மலை உச்சியில் இருந்து ரவுடிகளால் தள்ளி விடப்படுகிறாள். சரியான நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திக் ரேவதியை காப்பாற்றி மேலே தூக்குகிறான்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக்கை இது எல்லாத்துக்கும் காரணம் மாயா தான் என்ற உண்மையை உடைக்க ரேவதி அதை நம்ப மறுக்கிறாள்.
நல்லவள் வேஷம் போடும் மாயா:
உடனே மாயாவுக்கு போன் போட்டு நீங்க தான் என்னை கொள்ள ஏற்பாடு பண்ணீங்களா? என்று கேட்க மாயா நான் ஏன் ரேவதி அப்படியெல்லாம் பண்ண போறேன் என்று நல்லவள் போல் வேஷம் போடுகிறாள்.
இதனால் ரேவதி கார்த்தியை திட்டி விடுகிறாள். பிறகு கார்த்திக் இங்கு நடந்த பஞ்சாயத்து எல்லாம் போதும் கிளம்பலாம் என்று சொல்லி ஊருக்கு அழைத்து வருகிறான்.
வெளிநாடு செல்கிறாளா ரேவதி?
ஊருக்கு வந்ததும் முதல் வேளையாக சாமுண்டீஸ்வரியிடம் நடந்த விஷயங்களை சொல்ல அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரேவதி வெளிநாட்டில் இருக்கும் தனது தோழிக்கு போன் போட்டு வெளிநாடு வந்து விடலாம் என்று இருப்பதாக சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















