Karthigai Deepam: நவீனுக்கு கட்டம் கட்டும் சந்திரகலா.. கோபத்தில் கொதித்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
சாமுண்டீஸ்வரியிடம் சிக்குவாரா கார்த்திக்?
இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சந்திரகலா கார்த்தியை சிக்க வைக்க சாமுண்டீஸ்வரியை அழைத்து வந்திருந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு தெரியாமல் கையெழுத்து போட்டு சந்திரகலாவின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான், இதனால் சாமுண்டீஸ்வரி அந்த இளையராஜா தானே கையெழுத்து போட்டுட்டு போறான், உனக்கு எதுக்கு இந்த வேலை என்று திட்டுகிறான்.
நவீனுக்கு கட்டம் கட்டும் சந்திரகலா:
பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்த பிறகும் சந்திரகலாவை திட்டுகிறான். அதன் பிறகு நவீன் துர்காவை கலாய்த்தபடி இருக்க இதை சந்திரகலா கவனிக்கிறாள். இவனை எதாவது செய்யணும் என யோசிக்கிறாள்.
அந்த சமயத்தில் நவீனை போனை எடுத்து அவனது அப்பாவிற்கு போன் செய்து நீங்க யார்? என்ன பண்றீங்க என்று விசாரிக்க அவர் நாங்க பெரிய பணக்கார குடும்பம், பிசினஸ் பண்றோம் என்ற உண்மைகளை உடைக்கிறார்.
நவீனிடம் கோபப்பட்ட சாமுண்டீஸ்வரி:
இதை கேட்ட சந்திரகலா நவீன் கார் டிரைவராக வேலை செய்யும் விஷயத்தை சொல்லி லொகேஷனையும் அனுப்பி வைக்க அவர் சாமுண்டேஸ்வரி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். நவீன் துர்காவை பிடித்திருப்பதாக சொல்ல சாமுண்டீஸ்வரி நீ ஏமாத்தி இந்த வீட்டிற்குள் வந்திருக்க என்று திட்டுகிறாள்.
நீ உண்மையை சொல்லி பொண்ணு கேட்டு இருந்தா கூட கொடுத்திருப்பேன், பொய் சொல்லி உள்ள வந்த உனக்கு என் பொண்ணை தர மாட்டேன் என்று நவீனை வெளியே துரத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















