karthigai Deepam: தல தீபாவளி கொண்டாடிய கார்த்திக் - ரேவதி.. செல்போனை வீசிய சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் ஷாப்பிங் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தல தீபாவளி கொண்டாட்டம்:
அதாவது சாமுண்டீஸ்வரி கார்த்திக் ரேவதி என எல்லோருக்கும் டிரஸ் எடுத்து கொடுத்து தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டுகிறாள்.
அடுத்ததாக தீபாவதி கார்த்திக்கின் ஆதார் கார்டை கேட்க கார்த்திக்கு சந்தேகம் உருவாக அந்த ஆதார் கார்டை மாற்றிக் கொடுக்கிறான். மேலும் ரேவதி மற்றும் தனது மாமாவிடம் அத்தை உண்மையை கண்டுபிடிக்கிறதுக்குள்ள நானே உங்ககிட்ட உண்மையை சொல்லிடனும் என முடிவெடுக்கிறான்.
போனை வீசும் சந்திரகலா:
மேலும் அந்த கான்ஸ்டபிளின் செல்போன் கிடைத்து விட்டால் எல்லாத்திற்கும் தீர்வு கிடைத்தவுடன் என்று பேசிக் கொள்கின்றனர். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி செல்ஃபோன் கடைக்கு போன் செய்து போன் என்னாச்சு என்று விசாரிக்க போன் ரெடி ஆகிவிட்டதாக சொல்கின்றனர். தனது வீட்டு முகவரியை குறித்து டெலிவரி செய்ய சொல்கிறாள்.
கடைக்காரனும் அதே போல் போனை டெலிவரி செய்ய சாமுண்டீஸ்வரி அதை பணம் கொடுத்து வாங்குகிறாள். இதை சந்திரகலா கவனிக்கிறாள். அதன் பிறகு சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் அந்த போனை தூக்கி தெருவில் வீசுகிறாள்.
மீண்டும் அங்கே வந்த சாமுண்டீஸ்வரி போன் காணாமல் போனதை கவனிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















