Karthigai Deepam: மாட்டிக்கொண்ட சந்திரகலா.. கார்த்திக் உண்மையை கண்டுபிடித்தது எப்படி?
கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்று நடந்த சனிக்கிழமை எபிசோடில், கார்த்திக் சிவனாண்டி சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதி வாங்கிய விஷயத்தில் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை கண்டுபிடித்த ஆசிரியர்கள்:
அதாவது, கார்த்திக் எந்த ஆசிரமத்திற்காக இல்லத்தை எழுதி கேட்டதா சொன்னார்களோ அது ஆசிரமத்திற்கு சென்று விசாரிக்க அவர்கள் நாங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று சொல்கின்றனர். இதனால் வந்தவர்கள் போலியான நபர்கள் என தெரியவருகிறது.
ஷாக்கில் சாமுண்டீஸ்வரி:
இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். அதைத்தொடர்ந்து மறுபக்கம் ரேவதி பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த விஷயத்தை சொல்ல, அவர் என் மருமகள் பாவம் என்று வருத்தப்படுகிறார்.
வருத்தப்படும் பரமேஸ்வரி:
இதனால் ரேவதி அவங்க உங்கள மதிக்கவே மாட்டாங்க அப்படி இருக்கும்போது நீங்க ஏன் அவங்களுக்காக கவலைப்படுறீங்க என்று கேட்க பாட்டி என் மருமகள் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிறாள். என்ன தான் இருந்தாலும் அவ ராஜ ராஜன கட்டிக்கிட்டு அதனால என் மருமக தான் என்று சொல்கிறார்.
அதன் பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் பத்திர பேப்பர்களை வாங்கும் கடைக்கு சென்று இவர்கள் குறித்து விசாரிக்க பிறகு சிசிடிவி காட்சிகளை வைத்து யார் என்பதை கண்டுபிடிக்கின்றனர்.
சந்திரகலாவை மடக்கிய கார்த்திக்:
அதன் பிறகு சந்திரகலாவை சந்தித்து விசாரிக்க அவள் எனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்ப வீடியோ ஆதாரத்தை காட்டி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
பிறகு கார்த்திக் சந்திரகலாவிடம் காளியம்மாவுக்கு போன் போட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















