Amudhavum Annalakshmiyum: செந்திலை காப்பாற்றிய அமுதா.. கடும் கோபத்தில் அன்னலட்சுமி .. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் காணாமல் போன செந்திலை அமுதா போராடி மீட்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
இதுவரை நடந்தது என்ன?
முன்னதாக காணாமல் போன செந்திலை பற்றி பல இடங்களில் அமுதா விசாரிக்கிறாள். ஒரு பக்கம் மாணிக்கம் தேடுகிறார். பின் அமுதா செய்வதறியாமல் பதறியபடி, மாணிக்கத்திடம் செல்வாவுக்கு போன் அடிக்கலாமா என கேக்க, மாணிக்கம் சரி என சொல்கிறார். உடனே அமுதா போன் செய்து விஷயத்தை சொல்ல, ஒண்ணும் பயப்படாதம்மா, நம்ம ஆட்களை விட்டு தேடச் சொல்றேன் நீ ஒண்ணும் கவலைப்படாத என செல்வா சொல்கிறான்.
View this post on Instagram
பின்னர் செல்வாவின் ஆட்கள் காரை எடுத்துக் கொண்டு செந்திலை தேடி கிளம்புகின்றனர். இதனிடையே செந்தில் மதுபோதையில் பழனியிடம் சிக்குகிறான். அவனை காரில் ஏற்றிக் கொண்டு செல்லும் செல்வா ஆட்கள் குறுக்கிட்டு உங்களை பார்த்தா புது ஆளுங்களா இருக்கீங்க, யாரு நீங்க என விசாரிக்கின்றனர். பின்னர் செந்தில் இருக்குமிடம் அமுதாவுக்கு தெரிய வருகிறது.
இன்றைய எபிசோட் அப்டேட் இதோ
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அமுதா செந்திலை காப்பாற்ற முயல, செல்வாவும் செல்வாவின் ஆட்களும் உள்ளே வந்து பழனியின் ஆட்களை அடித்து விரட்டுகின்றனர். தொடர்ந்து செல்வாவின் ஆட்களில் ஒருவன் மேலே ஏறி கயிற்றை அவிழ்த்து செந்திலை கீழே இறக்கி காப்பாற்ற உதவுகிறான். இதனையடுத்து போலீஸ் ஸ்டேஷனலிருந்து செல்வாவிற்கு போன் வருகிறது.
அதில் செந்திலை கடத்தியவர்கள் சரணடைந்து விட்டதாக சொல்கின்றனர். உடனடியாக செல்வா, அமுதா, மாணிக்கம் வந்து அது யார் என பார்க்க, வாத்தியார் சரணடைந்து இருக்கிறான். செந்திலுக்கும் தனக்கும் ஏற்கனவே பகை இருந்ததால் அதை தீர்த்து கொள்ள தான் தான் அப்படி செய்ததாக சொல்கிறான். பின்னர் செந்தில் போதையில் இருப்பதை பார்த்தால் அன்னலட்சுமி வருத்தப்படுவார் என மாணிக்கம் தெரிவிக்கிறார். அதனால் போதை தெளிய வைத்து வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்கின்றனர். பிறகு செந்தில், அமுதா, மாணிக்கம் மூவரும் வீட்டிற்கு வர அன்னலட்சுமி செந்திலை திட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.