Amudhavum Annalakshmiyum: கடையை மீட்டெடுக்கும் அமுதா.. சவால் விடும் வடிவேலு .. இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் கடன்காரரின் பிடியில் சிக்கிய கடையை அமுதா மீட்டெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
முன்னதாக அமுதாவும் அன்னலட்சுமியும் வடிவேலு கடைக்கு வரும் நிலையில் அங்கு கடை பூட்டியிருக்கிறது. இதுகுறித்து விவரம் கேட்க, கடை கடன்காரரிடம் சென்று விட்டதாக வடிவேலு தெரிவிக்கிறார். இதனையடுத்து கடன்காரன் குமரேசனை தேடி இருவரும் செல்கின்றனர். ஆனால் பத்து லட்சம் பாக்கி இருக்கு.. பணத்தை கொடுத்து விட்டு கடை சாவியை வாங்கிக் கொள்ள சொல்லி விடுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர்.
இன்றைய எபிசோடில் கடை பறிபோனதால் பிரச்சனையில் மாணிக்கத்தை வடிவேலு திட்டுகிறான். இதனால் டென்ஷனாகும் அமுதா வடிவேலுவை தண்ட சோறு என திட்டுகிறாள். இந்த பிரச்சினையில் ஆத்திரமடையும் வடிவேலு மனைவி சுமதி, அவர் வாங்கிய கடன் தொகையை தனது அப்பா தருவதாக உறுதியளிக்கிறாள். உடனடியாக சுமதி,செல்வாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள்
View this post on Instagram
சிறிது நேரத்தில் செல்வா பணத்துடன் செந்தில் வீட்டிற்கு வருகிறான். செல்வா பணத்தை கொடுத்து விட்டு இந்த பணத்திற்கு அமுதாவை கேரண்டி தர சொல்ல, அமுதா சம்மதம் சொல்லிவிடுகிறாள். அதேசமயம் வடிவேலு இனிமேல் கடை பக்கம் வரக் கூடாது என கறாராக சொல்கிறாள். இதன்பின்னர் அமுதா பணத்துடன் குமரேசன் வீட்டிற்கு வந்து பணத்தை கொடுத்து கடை சாவியை வாங்கி விட்டு வீட்டுக்கு வருகிறாள்.
இதனையடுத்து வடிவேலு கடை சாவியை எடுக்க முயற்சிக்கும் போது அதனை தடுக்கும் அமுதா, சாவியை நீ தொடக் கூடாது என சண்டையிடுகிறாள். இதனால் கடுப்பாகும் வடிவேலு நீ எப்படி கடைய நடத்துறேன்னு நானும் பார்க்குறேன் என அமுதாவுக்கு சவால் விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.