Siragadikka Aasai : ரோகிணியிடம் வசமாக சிக்கிய முத்து.. கோபத்தில் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ரவியின் ஓனர் ரவியை ”யாரு அவங்க” என கேட்டு பயங்கரமாக திட்டுகிறார். அவங்க ”என் ஒய்ஃபோட அம்மா” என்கிறார் ரவி.” இந்த மாதிரி இன்னொரு தடவை நடந்தா உன்னை வேலையை விட்டு அனுப்பிடுவேன்” என்கிறார். இதைக்கேட்டு ரவி அதிர்ச்சி அடைகிறார். விஜயா ரோகிணியின் ரூமுக்கு சென்று ”14 லட்சம் உங்க அப்பாவுக்கு சில்லறைக்காசுதானே அவரை அனுப்ப சொல்லு” என்கிறார்.
”அவன் வேலைக்கு போனா உங்க அப்பாவுக்கு தானே கெளரவ கொரச்சல். கனடா போயி வெய்யில்லயும் மழையிலயும் கஷ்டப்படுறதுக்கு இங்கயே பிஸ்னஸ் எதாச்சி பண்ணலாம் இல்ல” என்கிறார். இதை கேட்டு ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்.
ரவி வீட்டுக்குச் சென்று ஸ்ருதியிடம் அவரின் அம்மா ரெஸ்டாரண்டுக்கு வந்தது குறித்து சொல்கிறார். ஓனர் தன்னை திட்டியதாகவும் சொல்கிறார். ஆனால் ஸ்ருதி புரிந்து கொள்ளாமல் ”உனக்கு இன்ஃப்ரியாரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்” எனக்கூறி ரவியிடம் வாக்குவாதம் செய்கிறார். ரவி டென்ஷன் ஆகி அங்கிருந்து சென்று விடுகிறார்.
மறுப்பக்கம் வித்யாவும் ரோகிணியும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போது ஒரு அட்டோவை சவாரிக்கு அழைக்கின்றனர். பார்த்தால் அந்த ஆட்டோவை முத்து ஓட்டி வருகிறார். ரோகினி வித்யாவிடம் சொல்லி கார் ஓட்டிக்கிட்டு இருந்தவன் ஆட்டோ ஏன் ஓட்டுறான் என கேளு என சொல்லுகிறார். இது முத்துவின் காதில் விழுந்து விடுகிறது.
உடனே முத்து செல்வத்திற்கு கால் பண்ணி தன் கார் நண்பனிடம் இருப்பதாக கூறி சமாளிக்கின்றார். ரோகிணியை இறக்கி விட்ட பிறகு தெரிந்தவர் ஒருவர் வந்து கார் எங்கே என்று முத்துவிடம் கேட்கிறார். காரை வித்து விட்டதாக சொல்கிறார் முத்து. இது ரோகிணி காதில் விழுந்து விடுகிறது. ரோகிணி நேராக மனோஜிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார். ஆனால் மனோஜ் அதற்கு கூலாக பதில் சொல்கிறார். ரோகிணி மனோஜை ஏத்தி விடுகிறர்.
முத்து ஆட்டோ ஓட்டும் விஷயத்தை விஜயாவிடம் சொல்கிறார் ரோகிணி. ஆனால் விஜயா அதை கூலாக எடுத்துக்கொள்கிறார். ஆனால் ரோகிணி ”அத்தை அந்த கார் வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி வாங்கின காசுல வாங்கினது” எனக்கூறுகிறார். உடனே விஜயா தான் முத்துவிடம் இது குறித்து கேட்பதாக சொல்கிறார். அதற்கு ரோகிணி ”நீங்க கேட்டா தான் அவரு பதில் சொல்ல மாட்டாரே” என சொல்லுகிறார். யாரு கேட்டா சொல்லுவாங்களோ அவங்க கிட்ட சொல்லுறேன் என கூறிவிட்டு விஜயா செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.