மேலும் அறிய

Siragadikka Aasai: கூட்டத்தில் உண்மையை உடைத்த பாட்டி, அசிங்கப்பட்டு நிற்கும் விஜயா: சிறகடிக்க ஆசை இன்று!

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் பாட்டி உறியடி போட்டியை நடத்துகிறார். முதலில் மனோஜ் உறியடிக்கிறார். அவரை குடும்பத்தினர், ஊரில் உள்ளவர்கள் அனைவரும் என்கரேஜ் செய்கின்றனர்.  ரோகினி மனோஜூக்கு என்கரேஜ் செய்வதைப் பார்த்த ஸ்ருதி, ”இப்போ எதுக்கு அவருக்கு என்கரேஜ் பன்றிங்க? நம்ம டீம் தான் ஜெயிக்கணும்” என சொல்கிறார்.

இரண்டாவது ரோகினி உறியடிக்கிறார். ஆனால் அவரால் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து ரவி களம் இறங்குகிறார். பின்னர் ஸ்ருதி ,மீனா என அடுத்தடுத்து களம் இறங்குகின்றனர். மீனா மனோஜின் தலையில் தெரியாமல் அடித்து விடுகிறார். 

இதனையடுத்து களம் இறங்கும் முத்து சரியாக உறியை அடித்து விடுகிறார். அவரின் நண்பர்கள் அவரைத் தூக்கி கொண்டாடுகின்றனர். அதற்கு முத்து ”என்னை ஏன்டா தூக்கிறிங்க, நம்ம டீமோட கேப்டன் யாரு? அவங்கள தூக்கலாம் வாங்க” என சொல்கிறார். பின்னர் முத்து ரவி, மனோஜ் ஆகியோர் சேர்ந்து விஜயாவை தூக்குகின்றனர். விஜயா வியப்பாக முத்துவை பார்க்கின்றார். இதனையடுத்து டயர் ஓட்டும் போட்டி நடக்கின்றது. ”பாட்டி இந்த டயரை வச்சி என்ன பண்ணனும்? என ஸ்ருதி கேட்கிறார். " சமச்சி சாப்பிடணும்" என முத்து சொல்கிறார். 

இந்தப் போட்டியில் முத்துவும் மீனாவும் ஜெயிக்கின்றனர். போட்டி முடிந்து அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு பெண் ”உங்க எல்லோரையும் இப்படி ஒன்னா பார்க்குறதுக்கு சந்தோஷமா இருக்கு” என சொல்கிறார். முத்து ஜெயிக்கக் கூடாது என குடும்பத்துக்குள்ளேயே சிலர் ப்ளான் போட்டதாக பாட்டி அனைவர் முன்னிலையிலும் சொல்லி விடுகிறார்.  ”இன்னைக்கு இருக்குற மனக்கசப்பெல்லாம் நாளைக்கு மாறும். அதனால குடும்பத்துக்குள்ளேயே நீ நான்னு போட்டி இருக்கக் கூடாது. எல்லோரும் ஒன்னா இருக்கனும். அத நீங்க புரிஞ்சிக்க தான் இந்தப் போட்டியே நான் நடத்துனேன்”எனப் பாட்டி சொல்லுகிறார். அனைவரும் அமைதியாக நிற்கின்றனர். 

எல்லோரும் நாளைக்கு வேலைக்கு போகனும் என சொல்கின்றனர். மீனா நாளைக்கு கடையைத் திறக்க வேண்டும் என சொன்னவுடன், விஜயா ”ஆமா பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி” என சொல்கிறார். பாட்டியும் அண்ணாமலையும் விஜயாவை கண்டிக்கின்றனர். பின்னர் முத்து மனோஜை கலாய்க்கிறார். பின்னர் “ட்ரூத் ஆர் டேர் கேம் விளையாடலாம்” என ஸ்ருதி சொல்லுகிறார். பின்னர் அனைவரும் சேர்ந்து கேம் விளையாடத் தொடங்குகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்க 

Suriya - Jyothika: உறைபனியில் உருகும் காதல்! பின்லாந்து நாட்டில் சூர்யா - ஜோதிகா: இதயங்களை அள்ளும் வீடியோ!

Rio Raj : கடுப்பாகிட்டார்.. நடிக்க வேணாம்னு சொல்லிட்டாரு.. லோகேஷ் கனகராஜ் குறித்து ரியோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget