Kaatrukkenna Veli: ‘ஜெயில்ல இருந்தா முதலிரவு சீன் தான் நியாபகம் வரணுமா?’ - மீம் மெட்டீரியலான காற்றுக்கென்ன வேலி சீரியல்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென வேலி சீரியல் இந்த வார ட்ரோல் மெட்டீரியலாக இணையவாசிகளின் கையில் சிக்கியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென வேலி சீரியல் இந்த வார ட்ரோல் மெட்டீரியலாக இணையவாசிகளின் கையில் சிக்கியுள்ளது.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுவிட்ட இந்த காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சிகளில் ஏதேனும் சிறு சம்பவங்கள் கூட பிசிறு தட்டினாலும் சரித்திரமாகி விடும் அளவுக்கு கேலி செய்யப்பட்டும், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் அளவுக்கு சென்று விடும்.இந்த விமர்சனங்கள் சம்பந்தப்பட்டவர்கள் பாசிட்டிவாக, நெகட்டிவாக எடுத்துக் கொள்வதைப் பொறுத்து அதன் தன்மை அமையும்.
இப்படியான நிலையில் சமீபகாலமாக சீரியல்களும் சினிமா படங்களை மிஞ்சும் அளவுக்கு காட்சிகளை கொண்டு எடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் சீரியல் என்றாலே அழுகையும், குடும்ப சந்தோஷம், பிரச்சினைகள் போன்றவை தான் காட்டப்படும். ஆனால் இப்போதே அப்படியே உல்டாவாக மாறி அதிரடி சண்டை காட்சிகளும்,காதல் காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் சினிமா பாடல்கள் என நாம் பார்ப்பது சீரியலா இல்லை சினிமாவா என்ற குழப்பத்தையே நமக்கு ஏற்படுத்தி விடும்.
இப்படியான நிலையில் விஜய் டிவியில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. கடைசி அத்தியாத்தில் வெண்ணிலா தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பை வாசிக்க தொடங்குகிறது. இந்த நேரத்தில் சூர்யா சரியாக அங்கு வந்து சேர அவர் வெண்ணிலாவை காப்பாற்றுவாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ் எபிசோடு என்பதால் பலரும் ஆவலுடன் சீரியலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
View this post on Instagram
இப்படியான சூழலில் நேற்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது. இதில் ஜெயிலில் இருக்கும் வெண்ணிலா தன்னுடைய கணவர் சூர்யாவை நினைத்து உருகும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அப்போது இருவருக்கும் இடையேயான முதலிரவு காட்சிகள் வந்து சென்றது. இதன் பின்னணியில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்ற நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் ஓடுகிறது. சுமார் ஒரு நிமிடத்திற்கும் மேலாக செல்லும் அந்த வீடியோவில் இருவரும் உருகி உருகி முதலிரவில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதனைப் பார்த்த இணையவாசிகள், “ஜெயில்ல உட்கார்ந்து முதல் இரவு காட்சி தான் நியாபகம் வரும் அப்படிதானே.. ஜெயிலில் யோசிக்க வேற ஹேப்பி மொமண்ட்ஸ் இல்லையாடா உனக்கு..டேய் எல்லை மீறி போறிங்கடா.. அநியாயம் டா.. ஏதோ 2 வாரம் பிரிஞ்சி இருந்துகிட்டு ஏதோ ஒரு 6 வருஷம் பிரிஞ்ச மாதிரி பண்றீங்களேடா..” என சகட்டுமேனிக்கு கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Chandramukhi 2: சந்திரமுகி-2 பார்க்க போறீங்களா?.. 18 ஆண்டுகளுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகோங்க..!