Kizhakku Vaasal: ஆரம்பமே முக்கோண காதல்.. கடுப்பான எஸ்.ஏ.சந்திரசேகர்.. கிழக்கு வாசல் சீரியல் அப்டேட் இதோ..!
விஜய் டிவியில் இன்று முதல் ஒளிரப்பாகவுள்ள ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை காணலாம்.
விஜய் டிவியில் இன்று முதல் ஒளிரப்பாகவுள்ள ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை காணலாம்.
‘கிழக்கு வாசல்’ சீரியல்
ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரிக்கிறார். இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் இன்று முதல் (ஆகஸ்ட் 7) இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?
ஆரம்பமே ரேணு (ரேஷ்மா முரளிதரன்) பி.எஸ்சி., படிப்பின் இறுதி செமஸ்டரில் முதல் வகுப்பில் பாஸ் ஆகும் காட்சியோடு தொடங்குகிறது. இதனை படிக்காத அவரது மாமா சண்முகம் (வெங்கட் ரங்கநாதன்) கொண்டாடுகிறார். ஷண்முகத்துக்கு ரேணு மீது காதல் உள்ளது. தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் ரேணுவை மற்றொரு மாமா தயாளனின் மகன் அர்ஜூன் (தினேஷ் கோபாலசாமி) சந்திக்கிறார். தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கி பிடிச்சிருக்கா என கேட்கிறார்.
அதற்கு ரேணு உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என பதில் அளிக்கிறார். அவர்களுக்குள் காதல் இருப்பது தெரிய வருகிறது. மேலும் மோதிரத்தை போட்டுக் கொள்ளுமாறு சொல்ல ரேணு மறுக்கிறார். திருமணம் உறுதியானவுடன் நீங்களே வந்து போட்டு விடுங்க எனவும் தெரிவிக்கிறார். உடனே நான் சீக்கிரமே வீட்டில் நம்ம கல்யாணத்தை பத்தி பேசுறேன் என்ன அர்ஜூன் சொல்கிறார். அதன் பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகம்
இதனைத் தொடர்ந்து வீட்டில் சுவாமியப்பன் (எஸ்.ஏ.சந்திரசேகர்) பூஜை செய்வதோடு தனது மறைந்த பெற்றோர்கள் முன் நின்று “அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் என்ன வழக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க அப்ப எனக்கு புரிய, வயசாக வயசாக தான் உங்க அருமை எனக்கு புரியுது. தாய் தகப்பனோட அருமை அவங்க நம்ம பக்கத்துல இருக்கும்போது யாருக்கும் தெரிவது இல்லை. எல்லா பிள்ளைகளும் அப்படித்தான். நானும் அப்படித்தான் இருந்தேன். இன்னைக்கு எனக்கு 60 வயசு பூர்த்தி ஆகுது. இப்ப இருக்க ஞானம் 30 வயசுல எனக்கு இருந்திருந்தால் உங்களை நான் நல்லா வச்சு பார்த்திருப்பேன்' என தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் சுவாமியப்பனிடம் ஆசீர்வாதம் பெறுகின்றனர். மேலும் அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளும் தொடங்குகிறது. ஆனால் அவரது மகன் நடேசன் (அருண் குமார ராஜன்) அவருக்கு எல்லாம் அறுபதாம் கல்யாணம் எப்ப தேவையா? என கேட்கிறார். அவருடைய மனைவி அமைதியாக இருக்கும்படி கூறுகிறார்.
இப்படியான நிலையில் வாசலில் ரேணுகாவுக்காக சண்முகம் பட்டாசு வெடிக்கிறார். பின்னர் ஆரத்தி எடுத்து முடிக்கையில் ரேணு சுவாமியப்பனிடம் வாழ்த்து பெறுகிறார். அப்போது சுவாமியப்பன் மனைவியின் தம்பியான தயாளன் (ஆனந்தபாபு) குடும்பத்தோடு அங்கு வருகிறார். எதுக்கு இப்ப பட்டாசு வெடிக்கிறீங்க என கேட்க, ரேணு பரீட்சையில் பாஸ் ஆகிவிட்டாள் என சொல்கிறார்கள்.
அதற்கு, “அவ என்ன ஐஏஎஸ் படிச்சா பாஸ் ஆயிட்டா?” என்ன நக்கலாக பேசுகிறார். அப்போது சுவாமியப்பன் எனக்கு அறுபதாம் கல்யாணம் சிம்பிளாக கோயிலில் அர்ச்சனையோடு முடித்துக் கொள்ளலாம் என சொன்னேன். ஆனால் இவர்கள் தான் பெரிதாக செய்கிறார்கள் என சொல்ல ஆனந்தபாபுவின் மனைவி கீதா (கீதா நாராயணன்), இந்த குடும்பத்துல ஒவ்வொரு சொந்தமும் எப்படி வந்ததுன்னு அவங்களுக்கு தெரியும். அதனால தான் அவங்க செய்ய ஆசைப்படுறாங்க என சொல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.