Kizhakku Vaasal, August 18: ‘இதுக்கு பேரு ட்விஸ்டா?’ .. கிழக்கு வாசல் சீரியலில் இன்று நடப்பது என்ன தெரியுமா?
Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.
Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 18) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.
கிழக்கு வாசல் சீரியல்
நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இன்றைய எபிசோட் அப்டேட்
அர்ஜூன் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் பயந்துபோன ரேணு அவருக்கு போன் செய்து சமாதானம் செய்கிறார். தன்னால் ரிஜிஸ்டர் ஆபீஸூக்கு வர முடியாது என தெரிவிக்க, வராவிட்டால் தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அர்ஜூன் தெரிவிக்கிறார். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும் அப்பா தயாளன், மனைவி கீதாவிடம் போய் நடந்ததை சொல்ல உடனடியாக சாமியப்பன் வீட்டுக்கு சென்று கேட்கலாம் என சொல்கிறார்.ஆனால் அர்ஜூனை பாஞ்சாலி மகளுடன் திருமணம் செய்து வைக்க தயாளன் திட்டம் போடுகிறார்.
இதற்கிடையில் அர்ஜூன் தற்கொலை செய்துக்கொள்வதாக கனவு காணும் ரேணு, பதறிப்போய் அவருக்கு போன் செய்கிறார். எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும், ரிஜிஸ்டர் வர வேண்டும் என அர்ஜூன் மீண்டும் மீண்டும் மிரட்டுகிறார். இதனால் யோசிக்கும் ரேணு, தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு செல்கிறார். அவரை வழிமறிக்கும் பார்வதி வெளியே போவது பற்றி விசாரிக்கிறார். தான் கோயிலுக்கு செல்வதாக தெரிவித்து விட்டு ரேணு செல்கிறார்.
வீட்டில் போனை வைத்து விட்ட வந்த நிலையில் அர்ஜூன் அங்கு வரவில்லை. நீண்ட நேரமாக அவர் நின்று கொண்டிருக்க, அங்கு தயாளன் வந்து சரமாரியாக ரேணுவை விமர்சிக்கிறார். ஆனால் அர்ஜூன் தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டியதால் தான் இங்கு வந்தேன் என ரேணு சொல்ல, அதை தயாளன் நம்ப மறுக்கிறார். ஆனால் அர்ஜூன் கடைசி வரை ரிஜிஸ்டர் ஆபீஸூக்கு வரவில்லை.
ஏன் தெரியாமல் ரேணு குழப்பமாக, தயாளன் அவள் மீதே திரும்ப திரும்ப குற்றம் சுமத்துகிறார். மேலும் தான் இருக்கும் வரை இந்த கல்யாணம் நடக்காது என மிரட்டுகிறார். ஆனால் ஏற்கனவே வீட்டில் இருந்து அர்ஜூனை பிடித்து தயாளன் ரிஜிஸ்டர் ஆபீஸ் போற விஷயத்தை கேட்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.