மேலும் அறிய

Baakiyalakshmi: எழில் - அமிர்தா வாழ்க்கையில் குறுக்கிடும் கணேஷ்.. பாக்கியா கோபிக்கு அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி இன்று!

Baakiyalakshmi Oct 16: கணேஷ் அமிர்தாவை மீண்டும் அழைத்துச் செல்ல எடுத்து இருக்கும் முடிவைப் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைகிறாள் பாக்கியா. ராதிகா அம்மாவின் பிறந்தநாளுக்காக கோபிக்கு ஷாக் கொடுத்த ராதிகா.

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் கணேஷ் அப்பா அம்மா இருவரும் பாக்கியாவை ஒரு பொது இடத்தில் சந்திக்கிறார்கள்.  கணேஷ் உயிருடன் திரும்பி வந்ததைப் பற்றி பாக்கியாவிடம் அவர்கள் சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். "எழிலும் அமிர்தாவும் சந்தோஷமா இருக்கிறார்கள். அவர்களிடம் எப்படி இதை சொல்ல முடியும்" என்கிறாள் பாக்கியா. 

"இறந்து போனதாக நினைத்த மகன் உயிருடன் திரும்பி வந்ததை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது அமிர்தா வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை" எனக் கவலைப்படுகிறார்கள் கணேஷின் அம்மா அப்பா. “அமிர்தாவை காணவில்லை அவளை தேடி கண்டுபிடிக்கிறோம் என எப்படி எப்படியோ சமாளித்தோம், ஆனால் அவனை அதற்கு மேல் சமாளிக்க எங்களால் முடியவில்லை. அமிர்தாவையும் நிலாவையும் நானே தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் என சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விட்டான். அவனைத் தேடி தான் நாங்கள் இங்கே வந்தோம்" என்கிறார் கணேஷின் அப்பா.

"அமிர்தாவுக்கு திருமணமான விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவளை எங்கோ பார்த்து விட்டான் போல இருக்கிறது வந்தால் அமிர்தா உடனும் நிலாவுடன் தான் நான் வீட்டுக்கு வருவேன் என சொல்லிவிட்டான் எங்களால் அவனை தடுக்க முடியவில்லை" என்கிறார் கணேஷின் அம்மா. 

அமிர்தாவை கணேஷ் எங்கோ பார்த்து விட்டான் என சொன்னதும் பாக்கியாவுக்கு சந்தேகம் வருகிறது.  கணேஷூடைய ஃபோட்டோ ஏதாவது இருந்தால் காட்டு சொல்லி கேட்கிறாள் பாக்கியா. கணேஷ் அப்பா கணேஷின் ஃபோட்டோவைக் காட்டியதும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் பாக்கியா. 

Baakiyalakshmi: எழில் - அமிர்தா வாழ்க்கையில் குறுக்கிடும் கணேஷ்.. பாக்கியா கோபிக்கு அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி இன்று!

"கணேஷ் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு எழிலும் அமிர்தாவும் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .அதனால் தான் உங்களை சந்திக்க நாங்கள் இங்கு வந்தோம்" என சொல்கிறார்கள் கணேஷின் பெற்றோர். அதிர்ச்சியோடு வீட்டுக்குத் திரும்புகிறாள் பாக்கியா. 

ராதிகா வீட்டில் மயூ அவள் சேமித்து வைத்த பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கிறாள். "இதை வைத்து நான் பாட்டியின் பர்த்டேக்கு நல்ல கிப்ட் ஒன்று வாங்கி கொடுக்கப் போகிறேன். சாரி வாங்கி கொடுக்கட்டுமா" என ராதிகாவிடம்  கேட்கிறாள் மயூ.  இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது கோபி அங்கு வந்து  வந்து விஷயத்தை கேட்டு அறிகிறார். 

அம்மாவோட 60வது பர்த்டே. நாமும் அம்மாவுக்கு பெரிய கிப்ட் ஏதாவது கொடுக்க வேண்டும்" என ராதிகா சொல்ல கோபி ஷாக்காகிறார். கோபி சின்ன சின்ன பொருட்களாக சொல்ல டென்ஷன் ஆன ராதிகா "கோல்ட் போல பெரிய கிப்ட் ஏதாவது கொடுக்க வேண்டும்.  ஒரு செயின் வாங்கிக் கொடுக்கலாம். ஈவினிங் வரும் போது ஒரு இரண்டு லட்சம் எடுத்துட்டு வந்துடுங்க" என ராதிகா சொல்ல, கோபி முழி எல்லாம் வெளியில் வந்துவிட்டது. 

கோபிக்கு பேங்கில் இருந்து ஒருவர் போன் செய்து "கட்ட வேண்டிய பணத்தை உடனடியாக கட்டணும்" என சொல்கிறார். கோபி டைம் கேட்டு எப்படியோ சமாளித்து விடுகிறார். "கிரெடிட் கார்டு, பேங்க் இப்படி மாறி மாறி தொல்லை செய்றாங்க இவ வேற 2 லட்சம் கொண்டு வா என்கிறாள்" டென்ஷனில் புலம்புகிறார்.

பாக்கியா கவலையாக வீட்டுக்கு வர அமிர்தா தண்ணீர் கொடுத்து "ஏன் டல்லாக இருக்கீங்க அம்மா?" என விசாரிக்கிறாள். "வேலை விஷயமா போய் இருந்தேன்" என சொல்லி பாக்கியா சமாளிக்கிறாள். பின்னர் கணேஷ் எப்படி இறந்தான் என்பதை பற்றி அமிர்தாவிடம் விசாரிக்கிறாள் பாக்கியா. 

ராமமூர்த்தி நிலாவை பார்க்குக்கு அழைத்து செல்கிறேன் என சொன்னதும் வேலை செய்து கொண்டிருந்த பாக்கியா வேகவேகமாக வெளியே ஓடி வந்து பார்க்குக்கு எல்லாம் கூட்டிட்டு போக வேண்டாம் என சொல்லி தடுகிறாள். அவள் அப்படி பேசுவதை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 
   
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget