Baakiyalakshmi: பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக நிற்கும் ராதிகா.. ஈஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்.. பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்!
Baakiyalakshmi Nov 8: வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி. பாக்கியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ராதிகா. கொந்தளித்த ஈஸ்வரி. பாக்கியலட்சுமியில் காத்திருந்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (நவம்பர் 8) எபிசோடில் ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள். அனைவரும் தடுத்தும்கூட அது எதையும் காதில் வாங்காமல் குழந்தையுடன் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்து விடுகிறாள். செல்வி போய் சமாதானமாக பேசியும் ஜெனி கேட்கவில்லை.
"நீங்க போங்க செல்வி அக்கா" என செல்வியை அனுப்பி வைத்து விடுகிறாள். அந்த சமயத்தில் அங்கே வந்த ராதிகா, ஜெனியை சமாதானம் செய்து காரில் அழைத்து செல்கிறாள். போகும் வழியில் ராதிகாவிடம் செழியன் செய்த துரோகத்தை பற்றி சொல்கிறாள் ஜெனி. ராதிகா ஜெனியை அழைத்து சென்று ஜெனியின் அம்மா வீட்டில் விட்டுவிட்டு வருகிறாள்.
வீட்டில் ஈஸ்வரியும் கோபியும் பாக்கியா மீது பழியை போடுகிறாள். "பாக்கியா மட்டும் முன்னாடியே இந்த விஷயம் பற்றி சொல்லி இருந்தால் ஜெனி காதுக்கு போவதற்கு முன்னரே இந்த பிரச்சினையை சரி செய்து இருக்கலாம்" என பழிபோடுகிறார் கோபி. அந்த நேரத்தில் கைகளை தட்டியபடியே வீட்டுக்குள் வருகிறாள் ராதிகா. அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
"சபாஷ் தப்பெல்லாம் நீங்க செய்வீங்க.. ஆனா பழியை மட்டும் நாங்க சுமக்கணுமா? செழியன் செய்தது தப்பு அது பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கலை. ஆனால் பாக்கியா மீது பழியை போடுறீங்களா?" என பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக ராதிகா பேச, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
"நீ பேசாத" என ஈஸ்வரி ராதிகாவைத் திட்ட "நான் நியாயத்தை கேட்பேன்" என ராதிகா சொல்கிறாள். "நீயும் அந்த மாலினி மாதிரி வந்தவ தானே" என ஈஸ்வரி சொல்ல கோபமான ராதிகா "உங்க பையனும் செழியனும் தானே ஒரே மாதிரி" என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.
"என்ன ராதிகா என்னைப் பத்தி இப்படி சொல்ற?" என கோபி கேட்க "என்ன கோபி பழசு எல்லாம் மறந்து போச்சா?" என ராதிகா கோபிக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள். ஈஸ்வரி கோபியிடம் "இவளை முதல உள்ளே கூட்டிட்டு போ" என சொல்கிறார். கோபியும் ராதிகாவை அழைத்துச் செல்ல மறுபடியும் ஈஸ்வரி பாக்கியாவிடம் வந்து "இதை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன் பாக்கியா" என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் ஈஸ்வரி.
எழில் செழியனை திட்டுகிறான். எழில், அமிர்தா, இனியா மூவரும் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.