Baakiyalakshmi: பாக்கியா வீட்டுக்கு விரையும் கணேஷ்... பதட்டத்தில் பாக்கியா செய்த காரியம்... பாக்கியலட்சுமி இன்று!
Baakiyalakshmi : பாக்கியா கொடுத்த கால அவகாசம் முடிவடைந்ததால் அமிர்தாவையும் நிலாவையும் அழைத்து வருவதற்காக பாக்கியா வீட்டுக்குச் செல்லும் கணேஷ். பதட்டத்தில் பாக்கியா. இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானதில் எழிலும் அமிர்தாவும் நிலாவுடன் கோயிலுக்குச் செல்கிறார்கள். நிலாவுக்காக செய்த வேண்டுதலை நிறைவேற்றி வருவதாக எழிலிடம் நிலாவை விட்டுவிட்டு செல்ல அமிர்தாவை யாரோ அழைக்கும் குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்க்கிறாள்.
கணேஷை அந்த இடத்தில் பார்த்த அமிர்தா அதிர்ச்சியடைந்து அங்கிருந்து பதட்டத்துடன் எழிலிடம் ஓடி வருகிறாள். என்ன நடந்தது என எழில் கேட்க மயக்கமடைகிறாள் அமிர்தா. அவளை எழில் தட்டி எழுப்ப எழிலின் கையை வந்து தடுத்து நிறுத்துகிறான் கணேஷ். கணேஷை பார்த்த எழில் அதிர்ச்சி அடைகிறான். பல வாரங்களாக காத்திருந்த சஸ்பென்ஸ் இந்த வாரம் உடையப் போகிறது. கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரியவரப் போகிறது.
அந்த வகையில் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் பாக்கியா மிகவும் கலக்கத்துடன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறாள். கணேஷ் கொடுத்த டைம் முடிந்துவிட்டதால் அனைவருக்கும் இந்த உண்மை தெரிய வரப்போகிறது என பதட்டத்துடன் இருக்கிறாள் பாக்கியா. செழியன் பிரச்சினையில் இருந்தே இன்னும் மீள முடியாமல் தவிக்கிறோம். அடுத்த ஒரு அதிர்ச்சியை இந்தக் குடும்பத்தால் தாங்கிக் கொள்ள முடியாது என கடவுளிடம் அழுது புலம்புகிறாள்.
அடுத்த நாள் கணேஷ் தன்னுடைய வீட்டில் இருந்து அமிர்தாவையும் நிலாவையும் அழைத்து வருவதற்காக கிளம்புகிறான். பாக்கியா கேட்ட ஒரு மாத கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. அவங்க எதுவும் செய்தது போல தெரியவில்லை. அதனால் “நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யப்போகிறேன்” என கிளம்புகிறான். அந்த நேரம் பார்த்து பாக்கியா கணேஷின் அம்மாவுக்கு போன் செய்து அவள் முயற்சி செய்தது பற்றி சொல்கிறாள். ஆனால் கணேஷின் அம்மா அவன் பாக்கியா வீட்டுக்கு கிளம்பிவிட்டதை பற்றி சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
அதைக் கேட்டு பதட்டமடைந்த பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அந்த நேரத்தில் பழனிச்சாமி பாக்கியாவுக்கு போன் செய்து என்ன நடந்தது என கேட்கிறார். ஜெனி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது, கணேஷ் வீட்டுக்கு கிளம்பி வருவது என அனைத்தையும் பற்றி பழனிச்சாமியிடம் சொல்கிறாள்.
அமிர்தாவின் அம்மாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறாள் பாக்கியா. செல்வியிடம் புலம்பி அழுகிறாள் ஆனால் செல்விக்கு எதுவுமே புரியவில்லை. அந்த நேரம் அமிர்தா அங்கே வர, அமிர்தாவை பார்த்து பதட்டமாகிறாள் பாக்கியா. பின்னர் எழிலை அழைத்து அவனுடன் அமிர்தாவையும் வேகவேகமாக கோயிலுக்கு அனுப்பி வைக்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.
பாக்கியா வீட்டில் உள்ள அனைவரிடமும் கணேஷ் பற்றின விஷயத்தை சொல்லிவிடுவாளா? கணேஷ் எழிலை பார்ப்பது நிஜம் தானா? அல்லது அது எல்லாம் பாக்கியாவின் கனவாக இருக்குமா? அப்படி எழிலும் கணேஷும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட பின் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள ஒரே படபடப்புடன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) ரசிகர்கள்.