மேலும் அறிய

Year ender 2023: 'எதிர்நீச்சல்’ முதல் ‘சிறகடிக்க ஆசை’ வரை.. 2023ல் சின்னத்திரையை கலக்கிய டாப் 10 சீரியல்கள்!

Year ender 2023: தமிழ் சினிமாவுக்கு 2023ஆம் ஆண்டு மிக மிக அற்புதமான ஆண்டாக அமைத்தது. அதைப் போலவே சின்னத்திரையிலும் இந்த ஆண்டு களைகட்டியது என்றே சொல்ல வேண்டும்.

 தமிழ் சினிமாவைப் போலவே மக்களை தினசரி என்டர்டெயின் செய்து வருவதில் முக்கியப் பங்கினை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் மிகவும் அபிமான சின்னத்திரை நிகழ்ச்சி என்றால் எந்த ஒரு சந்தேகமும் இன்றி அது சீரியல் தான். 

ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு காலை முதல் இரவு வரை சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். அந்த வகையில் 2023ம் ஆண்டின் மக்களின் மனம் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

எதிர்நீச்சல் :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' தொடர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் மிகவும் ஸ்வாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது. திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரின் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவால் சீரியல் சில நாட்கள் அடிவாங்கியது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி சீரியலில் இணைந்தார். கடந்த சில வாரங்களாக மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

Year ender 2023: 'எதிர்நீச்சல்’ முதல் ‘சிறகடிக்க ஆசை’ வரை.. 2023ல் சின்னத்திரையை கலக்கிய டாப் 10 சீரியல்கள்!

சிறகடிக்க ஆசை :

இயக்குநர் எஸ். குமரன் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்தத் தொடர் ஆரம்பம் முதலே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களை மாமியார் எப்படி வேற்றுமையுடன் நடத்துகிறார் என்ற கதைக்களத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகிறது.

சிங்கப்பெண்ணே :

குடும்பச் சூழல் காரணமாக கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நகரத்தில் வந்து வேலை செய்யும் இடத்தில் அவள் எதிர்கொள்ளும் சவால்கள், புதிய அனுபவங்களை சுற்றிலும் நகர்கிறது 'சிங்கப்பெண்ணே' சீரியல். தனுஷ் கிருஷ்ணா இந்த சீரியலை இயக்கியுள்ளார்.  

கயல் :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' தொடரின் இயக்குநர் பி. செல்வம். குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கார்த்திகை தீபம் :

Year ender 2023: 'எதிர்நீச்சல்’ முதல் ‘சிறகடிக்க ஆசை’ வரை.. 2023ல் சின்னத்திரையை கலக்கிய டாப் 10 சீரியல்கள்!

வி. சதாசிவம் இயக்கத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'கார்த்திகை தீபம்'. நடிகர் கார்த்திக், ஆர்த்திகா லீட் ரோலில் நடிக்கும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வானத்தைப் போல :

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'வானத்தை போல' சீரியலை ராமசந்திரன் மற்றும் ஆர்.கே. இணைந்து இயக்கி வருகிறார்கள். இந்த சீரியலும் தொடர்ச்சியாக முன்னிலை இடத்திலேயே இருந்து வருகிறது. 

இனியா :

இயக்குநர் நாராயண மூர்த்தி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர். அக்கா தங்கை இருவரும் ஒரே வீட்டில் திருமணமாகி செல்ல அங்கே மாமனாருடன் ஏற்படும் சிக்கல்களை எப்படி இனியா சமாளிக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். 

பாக்கியலட்சுமி 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடர் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் தொடர். இயக்குநர் சிவசேகர் மற்றும் டேவிட் இணைந்து இயக்கி வரும் இந்த தொடர் ஒரு இல்லத்தரசி தனது குடும்பத்தின் நலனுக்காக எப்படி போராடுகிறாள் என்ற கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. 

Year ender 2023: 'எதிர்நீச்சல்’ முதல் ‘சிறகடிக்க ஆசை’ வரை.. 2023ல் சின்னத்திரையை கலக்கிய டாப் 10 சீரியல்கள்!

ஆனந்த ராகம் :

சன் டிவியில் 350 எபிசோட்களையும் கடந்து ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடரை சதாசிவம் பெருமாள் இயக்கி வருகிறார். அழகப்பன், அனுஷ்யா பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ள இந்தத் தொடரை சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.  

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வந்தது அடுத்து தற்போது வேறு ஒரு கதைக்களத்துடன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சிவா சேகர் மற்றும் டேவிட் சார்லி இணைந்து இயக்கி வரும் இந்த சீரியல் தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் ஒரு கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டாவது சீசனும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget