மேலும் அறிய

Nadhaswaram 2 : எதிர்நீச்சலுக்கு போட்டியாக வருகிறதா நாதஸ்வரம் 2? 9 மணி ஸ்லாட்டுக்கு வந்த சிக்கல்...

Nadhaswaram 2 : இயக்குநர் திருமுருகன் ஒரு சின்ன பிரேக்குக்கு பிறகு புதிய சீரியல் மூலம் சன் டிவியில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அது எந்த சீரியல் தெரியுமா?

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் திருமுருகன். யதார்த்தமான குடும்ப கதைகளை மையமாக வைத்து அவர் எடுக்கும் சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். தூர்தர்ஷன் சேனல் மூலம் தனது பயணத்தை தொடங்கிய இயக்குநர் திருமுருகன் 2002ல் சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' என்ற மெகா சீரியலை இயக்கி இருந்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது. 

Nadhaswaram 2 : எதிர்நீச்சலுக்கு போட்டியாக வருகிறதா நாதஸ்வரம் 2? 9 மணி ஸ்லாட்டுக்கு வந்த சிக்கல்...

முத்திரை பதித்தவர் :

மெட்டி ஒலி சீரியலின் அபார வெற்றிக்கு பிறகு நாதஸ்வரம், தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல்களை இயக்கி இருந்தார். வெள்ளித்திரையில் நுழைந்த இயக்குநர் திருமுருகன் நாசர், சரண்யா, பரத், கோபிகா நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'எம் மகன்' என்ற படத்தை இயக்கி அழுத்தமான ஒரு முத்திரையைப் பதித்தார். அதன் தொடர்ச்சியாக 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்ற படத்தையும் இயக்கி இருந்தார். 

மீண்டும் என்ட்ரி : 

கடந்த சில ஆண்டுகளாக சீரியல் அல்லது படம் என எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுடைய யூடியூப் சேனலில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நரட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம் அன்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்து இருந்தார். அதாவது இந்த ஆண்டு நிச்சயம் அவர் புதிய படைப்பு மூலம் சின்னத்திரை ரசிகர்களை சந்திக்க வருகிறார் என தெரிவித்து இருந்தார். இந்த தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அது மெட்டி ஒலி 2-ஆக இருக்குமா அல்லது நாதஸ்வரம் 2வாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள். 

Nadhaswaram 2 : எதிர்நீச்சலுக்கு போட்டியாக வருகிறதா நாதஸ்வரம் 2? 9 மணி ஸ்லாட்டுக்கு வந்த சிக்கல்...

நாதஸ்வரம் 2 :


தற்போது அது குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 2010 முதல் 2015ம் ஆண்டு வரை சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'நாதஸ்வரம்' மெகா தொடர் மாபெரும் வெற்றி பெற்றது. குடும்பக் கதையை மையமாக வைத்து  உருவான இந்த தொடர் பல விருதுகளை வென்றுள்ளது. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் திருமுருகன் நடித்து இருந்தார். 

Nadhaswaram 2 : எதிர்நீச்சலுக்கு போட்டியாக வருகிறதா நாதஸ்வரம் 2? 9 மணி ஸ்லாட்டுக்கு வந்த சிக்கல்...

ப்ரைம் டைம் :

நாதஸ்வரம் சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளது என்ற தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சமீபத்தில்தான் இதற்கான ஆடிஷன் நடைபெற்று சில நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரபூர்வமான தகவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

எதிர்நீச்சல் நிலை ?

இந்நிலையில் ஏற்கனவே சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான 'எதிர்நீச்சல்' சீரியல் முடிக்கப்படுமா? அல்லது வேறு ஒரு நேரத்திற்கு மாற்றப்படுமா? என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்துDhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்Ilayaraja : ’கடந்த ஒரு மாசமா..என்னை பற்றிய விமர்சனம்’’இளையராஜா ஓபன் டாக்GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?- துணைவேந்தரை உடனே நீக்கக் கோரிக்கை!
பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?- துணைவேந்தரை உடனே நீக்கக் கோரிக்கை!
PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
Embed widget