Surjith Ansari : இத்தனை செலிபிரிட்டிகளுடன் நடித்துள்ளாரா முத்தழகு 'மருது'... லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ போஸ்ட்
முத்தழகு சீரியலில் மருது கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுர்ஜித் அன்சாரி தனது குழந்தை பருவத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவங்களை ஒரு வீடியோவாக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்
![Surjith Ansari : இத்தனை செலிபிரிட்டிகளுடன் நடித்துள்ளாரா முத்தழகு 'மருது'... லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ போஸ்ட் Surjith Ansari playing Maruthu role in Muthazhagu serial has shared his sweet childhood memories acting with several star actors Surjith Ansari : இத்தனை செலிபிரிட்டிகளுடன் நடித்துள்ளாரா முத்தழகு 'மருது'... லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ போஸ்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/385be943b60563942b76ae11f5f077e91689064551942224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான 'முத்தழகு' ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது. கடந்த 2021ம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவர்த்தி, ஷோபனா, வைஷாலி தனிகா, லட்சுமி வாசுதேவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஒரு ஏழை பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் பணக்கார பையனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்கள் இடையே நடக்கும் பிரச்சனைகள் என குடும்பம் சார்ந்த ஒரு திரைக்கதையாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
முத்தழகு சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த சீரியலில் மருது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சுர்ஜித் அன்சாரி. இவர் குல தெய்வம், யாரடி நீ மோகினி போன்ற பல பிரபலமான தொடர்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
View this post on Instagram
வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுர்ஜித் அன்சாரி ஏராளமான நடிகர்களுடன் நடித்துள்ளார். அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் அறிமுகமான சுர்ஜித் சின்ன கலைவாணர் விவேக்குடன், நிலவினிலே படத்தில் 'காதலர் தினம்' புகழ் குணால் மகனாக, உதயா படத்தில் விஜயுடன், சார்லி சாப்ளின் படத்தில் பிரபுவுடன், சாது மிரண்டா படத்தின் பிரசன்னாவுடன், கண்ணுக்குள்ளே படத்தில் ஒரு கண் பார்வையற்ற ஒரு சிறுவனாக சரத்பாபு உடன், மனசெல்லாம் படத்தில் த்ரிஷாவுடன் என பல பிரபலமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது குழந்தை பருவத்து நினைவுகளை ஒரு வீடியோவாக சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்ட்டுக்கு அவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)