Ethirneechal: ஆப்பு வைத்த ஆதிரை! ஆடிப்போன குணசேகரன் ப்ரதர்ஸ் - இன்றைய எதிர்நீச்சல் அப்டேட்!
Ethirneechal : அருண், அப்பத்தா ஆக்சிடென்ட் கேஸ் எல்லாம் வெளியில் வரப்போகுது நீங்க எல்லாரும் மாட்ட போறீங்க என ஆதிரை மிரட்டும் காட்சிகளுடன் இன்றைய எதிர்நீச்சல் ப்ரமோ வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (ஜனவரி 4 ) எபிசோடில் ஜான்ஸி கரிகாலனுக்கு எப்படி தர்ஷினியை மடக்குவது என ஐடியா கொடுத்து கொண்டு இருக்கிறாள். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ஞானம் ஆதிரை அவர்கள் மூவரின் பேரில் கேஸ் கொடுத்து இருப்பது பற்றி சொல்லி ஷாக் கொடுக்கிறான்.
விசாலாட்சி அம்மா ஜனனியின் அம்மா வீட்டில் வந்த தஞ்சம் அடைந்துள்ளதை பற்றி வத்தி வைக்க, கதிரும் ஞானமும் எகிறுகிறார்கள். ஞானம் ஜனனியின் அம்மாவை அழைத்து உடனே வீட்டை விட்டு வெளியில் போக சொல்ல, கதிர் ஒரு பக்கம் விரட்டுகிறான். சக்தி அவர்களை எதிர்த்து பேசி, ஜனனியின் அம்மா வீட்டில் தான் இருப்பாங்க என கட் அண்ட் ரயிட்டாக சொல்லிவிடுகிறான். மீறினால் அப்பத்தாவின் வழக்கை மீண்டும் துவங்குவேன் என மிரட்டுகிறான். அதை கேட்டு கதிரும் ஞானமும் வாயடைத்து போகிறார்கள்.
ஜனனி சக்தியின் முழுமையான அன்பை இப்போது தான் புரிந்து கொள்கிறாள். அவனிடம் சென்று அனைத்திற்கும் நன்றி சொல்லி கூடவே காதலையும் வெளிப்படுத்திகிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
இன்றைய ப்ரமோ:
ஆதிரை போலீஸ் மற்றும் சாருபாலாவுடன் குணசேகரன் வீட்டுக்கு வருகிறாள். அவளை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "அருண் ஆக்சிடென்ட் கேஸ் மட்டும் இல்ல அப்பத்தாவோட ஆக்சிடென்ட் விஷயமும் வெளியில் வரப்போகுது" என மிரட்டுகிறாள். ஆதிரை பேசியதை கேட்டு கதிர் "என்ன சவால் விடுறியா?" என ஆவேசப்படுகிறான்.
ஜான்சிராணியும் கரிகாலனும் சேர்ந்து ஸ்கூலில் இருந்து வரும் தர்ஷினியை வலுக்கட்டாயப்படுத்தி கரிகாலனுடன் செல்ல அனுப்பி வைக்க முயற்சி செய்கிறாள். "யார் என்ன பண்ணறாங்கன்னு பாத்துரலாம்" என தர்ஷினியை பிடித்து இழுக்க அந்த நேரத்தில் அந்த வழியாக தர்ஷன் வந்து தர்ஷினியை அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான்.
விசாலாட்சி அம்மா ஜனனியின் அம்மாவை பார்த்து "உன்னோட பொண்ணு தான் இந்த வீட்ல நடக்குற எல்லா பிரச்சினைக்கும் காரணம்" என அசிங்கப்படுத்த அவர்களுக்கு சப்போர்ட்டாக சக்தி பேசுகிறான். "இவ என்னவோ வேணும்னே எல்லாத்தையும் கெடுத்த மாதிரி பேசிகிட்டு இருக்க. அவ இங்க வரணும் என ஒத்த காலில் நின்னது உன்னோட மகன்" என ஆவேசமாக பேச அதை கேட்ட விசாலாட்சி அம்மா திருதிருவென முழிக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
எலெக்ஷன் நேரத்தில் ஆதிரை அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளது, குணசேகரன் ஜெயிக்கும் வாய்ப்பை பாதிக்கும் என்பது ஞானம் மற்றும் கதிருக்கு பதட்டத்தை கொடுத்துள்ளது. இது வரையில் குணசேகரன் மட்டுமே ஜெயித்து வந்த நிலையில் பெண்கள் தற்போது முன்னேறி வருகிறார்கள். முதற்படியாக ஈஸ்வரி எலெக்ஷனில் நின்றது. ஆதிரை துணிச்சலுடன் வீட்டை விட்டு வெளியேறி சாருபாலாவிடம் தஞ்சம் புகுந்தது என அடுத்தடுத்து பெண்கள் குணசேகரனை எதிர்த்து அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.
வரும் ஞாயிற்றுகிழமை எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் ஒரு மணி நேர ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளது. ரசிகர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு அந்த எபிசோட் மூலம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.