Sunday Movies: தயாராகுங்கள் மக்களே.. நாளை டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் லிஸ்ட் இதோ..!
ஜூலை 16 ஆம் தேதி தொலைக்காட்சியில் 4 புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதுகுறித்து நாம் காணலாம்.
ஜூலை 16 ஆம் தேதி தொலைக்காட்சியில் 4 புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதுகுறித்து நாம் காணலாம்.
சின்னத்திரையில் இருக்கும் ரசிகர்களின் எண்ணத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சேனல் நிறுவனம் 24 மணி நேரமும் படங்களை ஒளிபரப்பும் வகையில் சேனல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தங்கள் நிறுவனங்களின் பிற சேனல்களிலும் அவ்வப்போது படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறுப்பாக வார இறுதி நாட்களில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகும் என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கார்கி
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்த படம் ‘கார்கி’. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்தாண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தவறே செய்யாமல் பாலியல் வழக்கில் சிக்கிக்கொள்ளும் தனது தந்தையை மீட்க போராடும் மகளாக நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியையாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படம் கலைஞர் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பட்டத்து அரசன்
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கிய படம் ‘பட்டத்து அரசன்’. இந்த படத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கபடி விளையாட்டை மையப்படுத்தி, உண்மையான நிகழ்வை மையப்படுத்தி வெளியான இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்த படம் கடந்தாண்டு நவம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசானது. இந்த படம் தற்போது சன் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.
எஸ்டேட்
கார்த்திக் வில்வகிரிஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், கலையரசன், ரம்யா நம்பீசன், சுனைனா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘எஸ்டேட்’. பேய் ஒன்று ஒருப்பதாக நம்பப்படும் எஸ்டேட் ஒன்றில் விசாரிக்க செல்லும் குழு எதிர்கொள்ளும் திகில் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி வெளியானது. இந்த படம் ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேழம்
அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன், ராஜா கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், மோகன் ஆகாஷே உள்ளிட்ட பலரும் நடித்த படம் “வேழம்”. சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்தாண்டு ஜூன் 24 ஆம் தேதி ரிலீசானது. இந்த படம் விஜய் சூப்பர் சேனலில் ஞாயிற்றுகிழமை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.