மேலும் அறிய

Sun TV : சிக்கலில் சன் டிவியின் டாப் சீரியல்கள்.. புது சீரியல்களின் வருகைதான் காரணமா? குழப்பத்தில் ரசிகர்கள் 

Sun Tv: சன் டிவியில் பிரபலமான சீரியல்களின் அஸ்திவாரத்தை ஆட்டிவைக்க படையெடுக்க இருக்கும் புதிய சீரியல்கள். 

சன் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் என்றுமே மவுசு அதிகம். மற்ற தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்டில் என்றுமே முதல் ஐந்து இடங்களை சன் டிவி சீரியல்கள்தான் பெற்று வருகின்றன. 

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய 'சிங்கப்பெண்ணே' சீரியல் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. கயல், எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா உள்ளிட்ட சீரியல்களின் ரேட்டிங் முன்னும் பின்னுமாக மாறி மாறி வருகிறது. 

Sun TV : சிக்கலில் சன் டிவியின் டாப் சீரியல்கள்.. புது சீரியல்களின் வருகைதான் காரணமா? குழப்பத்தில் ரசிகர்கள் 

சன் டிவியில் புதிய சீரியல்கள் சில வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதனால் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட உள்ளன. 'மல்லி' மற்றும் 'மெட்டி ஒலி 2 ' சீரியல் துவங்க உள்ளன என கூறப்படுகிறது. அதனால் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல், இனியா மற்றும் Mr . மனைவி சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

ஏற்கனவே  இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' தொடர் கடந்த சில மாதங்களாக நேரம் மாற்றப்பட்டு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. முதலிடத்தில் இருந்து வந்த அதன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைய அதன் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியது சேனல். தற்போது நான்காவது, ஐந்தாவது இடத்தில் மாறி மாறி இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர். தற்போது அதன் நேரத்தை மீண்டும் மாற்றி  இரவு 9.30 மணிக்கே ஒளிபரப்ப உள்ளனர். இதனால் அதன் டி.ஆர்.பி ரேட்டிங் மேலும் சரிய வாய்ப்புகள் உள்ளன.  

Sun TV : சிக்கலில் சன் டிவியின் டாப் சீரியல்கள்.. புது சீரியல்களின் வருகைதான் காரணமா? குழப்பத்தில் ரசிகர்கள் 

அதே இரவு 9 மணிக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்நீச்சல் சீரியல் நேரம் மாறினால் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மேலும் வரவேற்பு கூடி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் குறையவும் வாய்ப்புகள் இருக்கிறது என யூகிக்கப்படுகிறது.

Sun TV : சிக்கலில் சன் டிவியின் டாப் சீரியல்கள்.. புது சீரியல்களின் வருகைதான் காரணமா? குழப்பத்தில் ரசிகர்கள் 

மேலும் தற்போது 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'இனியா' தொடர் இனி 10.30 மணிக்கும், Mr . மனைவி சீரியல் இனி மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய சீரியல்களின் வருகையால் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேர மாற்றத்தால் சன் டிவி ரசிகர்கள் சற்று வருத்தமாக இருந்தாலும், புதிய சீரியல்களின் வருகை அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget