மேலும் அறிய
Ethirneechal serial: குணசேகரனை கதிகலங்க செய்யும் ஈஸ்வரி... எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal : குணசேகரன் பேச்சை கேட்டு மருமகள்களை அவமானப்படுத்தி பேசும் விசாலாட்சி அம்மா. கோபம் தலைக்கேறிய ஈஸ்வரி குணசேகரனிடம் கேட்கும் கேள்வி என்ன? இன்றைய எதிர்நீச்சலில்.

எதிர்நீச்சல் மே 9 ப்ரோமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மருமகள்கள் அனைவரும் சோகத்துடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து குழப்பத்தில் இருந்த விசாலாட்சிக்கு குணசேகரன் போன் செய்து உண்மையை சொன்னதும் அதிர்ச்சி அடைகிறார். வாசலுக்கு சென்று மருமகள்களை அவமானப்படுத்துகிறார்.
ஞானத்தை கதிர் மற்றும் சக்தி காரில் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அழுது புலம்பிக் கொண்டே வரும் ஞானம் "அண்ணன் முன்னாடி வாழ்ந்து காட்டுறேன் என சவால் எல்லாம் விட்டுட்டு வந்தேன். இப்போ அசிங்கப்பட்டு நிக்குறேன்" என சொல்லி அழுகிறான். "அந்த கரிகாலன் மட்டும் என்னோட கையில சிக்கினான் அவ்வளவு தான்" என சமாதானம் செய்கிறான் கதிர்.

அவமானப்படுத்திய விசாலாட்சி அம்மாவிடம் "உங்க புள்ள தான் ஜெயிச்சுட்டு வெளியே போங்கன்னு சவால் விட்டாரு. அதுக்காக தான் இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கோம்" என நந்தினி கோபத்தில் கொந்தளிக்க "அவன் இருக்க சொன்னா உங்களுக்கு எங்கடி போச்சு புத்தி" என நக்கலாக கேட்கிறார் விசாலாட்சி அம்மா. அவர் பேசியதை கேட்டு ஈஸ்வரிக்கும் ஜனனிக்கு கூட கோபம் தலைக்கேறுகிறது.
பொறுக்கமுடியாமல் ஆவேசத்துடன் கிளம்பிய ஈஸ்வரி குணசேகரனிடம் சென்று "நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்கிறாள். "நேத்து என்கிட்டே பேசி சவால்விட்டு கும்பல் எல்லாம் இப்போ அமைதியா இருக்கு. இப்போது நீ ஆரம்பிக்குறியாக்கும்" என கிண்டலாக கேட்க ஈஸ்வரி அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு குணசேகரனை கதிகலங்க செய்கிறாள். ஈஸ்வரி பேசுவதை கேட்டு ஜனனியும் தலைநிமிர்ந்து நிற்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
கரிகாலன் பேச்சைக் கேட்டு மாமியார் தொழில் செய்வதற்காக கொடுத்த 15 லட்சம் ரூபாயையும் கருவாடு தொழிலில் போடுகிறான் ஞானம். கரிகாலனுடன் கூட்டணி சேர்ந்தது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. கடை திறப்பு விழா அன்று தான் அவர்களுக்கு கரிகாலனுடன் இருக்கும் கூட்டணி தெரியவருகிறது. கடையை திறந்து வைப்பதற்காக நடிகை ஒருவரை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நடிகை வந்ததும் குத்துவிளக்கு ஏற்ற போலீஸ் வந்து அந்த விழாவை தடுத்து நிறுத்துகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் என்ன விஷயம் என விசாரிக்க இந்த ஸ்டாக் அனைத்துமே ஹார்பரில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட திருட்டு பொருட்கள் என்பது தெரிய வருகிறது.
போலீசை பார்த்ததும் கரிகாலனும் அவனது கூட்டாளியும் எஸ்கேப்பாகி விடுகிறார்கள். போலீஸ் கடத்தல் செய்த குற்றத்திற்காக ஞானத்தை கைது செய்கிறார்கள். ஏமாந்து போன வேதனையில் ரேணுகா அழுது புலம்புகிறாள். அவளை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். கதிரும் சக்தியும் இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசியதால் ஞானத்தை கைது செய்யாமல் விட்டுவிடுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

"வீட்டுக்கு வரவில்லை எனக்கு அசிங்கமாக இருக்கிறது நான் எங்காவது செல்கிறேன்" என ஞானம் சொல்ல ரேணுகா ஞானத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்து வீட்டுக்கு வரச்சொல்லி செல்கிறாள் ரேணுகா. இங்கு நடக்கும் கூத்து அனைத்தையும் குணசேகரன் காரில் உட்கார்ந்து கொண்டே பார்த்துக் கொண்டு இருக்கிறார். விசாலாட்சி அம்மாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
ஆட்டோ
Advertisement
Advertisement