Ethirneechal: ரூட் மாறிப்போகும் கதிர்.. ஆணவமாகப் பேசும் குணசேகரன்... எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Oct 26 :சம்பந்திகளை அவமானப்படுத்தி பேசும் குணசேகரன் ஒரு பக்கம்.. என்ன பிளான் என்பதையே மறந்து ரூட் மாறி வேறு சோக்கு தேடி போகும் கதிர்.. எதிர்நீச்சலில் என்ன நடக்கப்போகிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 25) எபிசோடில் ஆதி குணசேகரனாக புதிதாக என்ட்ரி கொடுத்த நடிகர் வேல ராமமூர்த்தி இரண்டு மூன்று எபிசோடுகளில் மட்டும் தலையைக் காட்டிவிட்டு பிறகு ஜெயிலுக்கு போய்விட்டார் எனக் கூறி கதைக்களத்தை வேறு விதமாக திருப்பி நகர்த்தி வந்தார்கள்.
அவ்வளவு தான் வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினார் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் மீண்டும் நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து திரும்பி வந்து விட்டதாக சொல்லி என்ட்ரி கொடுத்தார்.
வீட்டுக்கு வந்தவர் மகன் தர்ஷனுக்கு அட்வைஸ் செய்கிறேன் என அவனை கடுப்பேற்றுகிறார். மகள் தர்ஷினியை காபி போட்டு எடுத்துட்டு வா என சொல்லி அவளை வெறுப்பேற்றுகிறார். மறுபக்கம் ஜான்சி ராணி காரில் செய்யும் அலப்பறைகளை சகித்துக் கொள்ள முடியாமல் வெறுப்புடன் ஊருக்கு பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் மருமகள்கள்.
கதிரின் ரூட் வேறு பக்கம் திரும்புகிறது. இது எங்க போய் முடியப் போகிறது என்பது தெரியவில்லை. இது எல்லாம் கதிரின் கவனத்தை திசை திருப்புவதற்கான பிளானாக இருக்குமோ? இப்படியாக நேற்றைய எபிசோட் முடிவடைந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜான்சி ராணி வீணாக அனைவரையும் வம்புக்கு இழுக்க, அனைவரும் கடுப்பாகிறார்கள். கொந்தளித்த நந்தினி "இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்போம்" என ஜான்சி ராணியை மிரட்ட "ஏய் இது எங்க அண்ணனோட கார். நீங்க எல்லாரும் இறங்குங்கடி" என தெனாவட்டாக சொல்கிறாள் ஜான்சி. ஜனனிக்கு அவள் செய்யும் கூத்தை பார்க்கும்போது எரிச்சலாக இருக்கிறது.
கதிர் வளவனிடம் வண்டியை சக்கரைப்பட்டி பக்கமாக திருப்ப வேண்டும் என ஆர்டர் போடுகிறான். வளவன் கதிரைப் பார்த்து "நீ தேவையில்லாத வேலையெல்லாம் பாத்துகிட்டு இருக்க" என சொல்ல, "எது தேவையான வேலை எது தேவையில்லாத வேலை என எனக்கு தெரியும். நான் சொன்னதை மட்டும் செய்" என மிரட்டுகிறான். வளவனும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விடுகிறார்.
வீட்டில் நந்தினியின் அப்பா குணசேகரனிடம் "அப்பத்தா வர சொன்னாங்க அது தான்" என சொல்ல, "அவங்க வர சொன்னா வந்துருவீங்களா? வாங்க வாங்க அங்க என்ன நடக்குதுன்னு நீங்களும் பாக்கணும்ல" என சொல்லி அசிங்கபடுத்துகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.