மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் கொலைகாரன்.. உண்மையை உடைத்த சக்தி.. அதிர்ச்சியில் ஞானம் விசாலாட்சி!

Ethirneechal Nov 18 : ஜீவானந்தம் மனைவியைக் கொன்றது குணசேகரன் தான் என்ற உண்மையை அனைவருக்கும் மத்தியில் சக்தி போட்டு உடைக்க, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அடுத்து என்ன நடக்குது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மாவிடம் ரேணுகா அப்பத்தா எரிந்து சாம்பலானதைப் பற்றி சொல்ல, விசாலாட்சி அம்மா அதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது என்பதை ஞானம் மூலம் தெரிந்து கொள்கிறார்.

ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு சோகமாக வருகிறார்கள். "இதெல்லாம் பொய் தானே ஜனனி. அப்பத்தாவ இவங்க சொத்துக்காக ஒளிச்சு வைச்சு நாடகம் தானே ஆடுறாங்க" என நந்தினி கேட்க, அப்பத்தாவின் புடவையை அவளிடம் கொடுத்து "அப்பத்தா இல்ல அக்கா. இவங்க எல்லாரும் சேர்ந்து அப்பத்தாவ கொன்னுட்டாங்க" என சொல்லிக் கதறுகிறார். வீடே ஒரே ஒப்பாரியாக இருக்கிறது.

Ethirneechal: குணசேகரன் கொலைகாரன்.. உண்மையை உடைத்த சக்தி.. அதிர்ச்சியில் ஞானம் விசாலாட்சி!

"சும்மா கொன்னுட்டோம்ன்னு நாடகம் ஆடாதீங்க. அந்தக் கிழவி எங்களுக்கு செய்த பாவத்துக்கு தான் இப்படி ஒரு சாவு அது வந்து இருக்கு" என ஞானம் சத்தம் போட "கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா நாங்களும் இப்படி தான் பீஸ் பீஸா போய் இருப்போம்" என கரிகாலன் சொல்ல "அப்படி தானே டிராமா போட்டு இந்த ஊர நம்ப வைச்சு இருக்கீங்க. பக்கவா பிளான் போட்டு அப்பத்தாவை சாய்ச்சுபுட்டானுங்க" என சக்தி கோபத்தில் எகிறுகிறான்.

Ethirneechal: குணசேகரன் கொலைகாரன்.. உண்மையை உடைத்த சக்தி.. அதிர்ச்சியில் ஞானம் விசாலாட்சி!
வீடே துக்கத்தில் மூழ்கி இருக்க, ஈஸ்வரி வெண்பாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறாள். விசாலாட்சி அம்மாவும் ஞானமும் மாடியில் இருப்பதால் அவர்களிடம் பேசுவதற்காக ஈஸ்வரி மாடிக்கு செல்கிறாள். "ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்துட்டாங்க" என ஈஸ்வரி சொல்லவும், "தப்பு பண்ணவன் தண்டனையை அனுபவிக்க தான் வேணும். இப்ப அவனுக்காக வக்காளத்து வாங்க வந்துட்டியா?" என விசாலாட்சி அம்மா கேட்க, ஆத்திரமடைந்த ஈஸ்வரி "போதும் நிறுத்துங்க அத்தை" என கத்துகிறாள். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது :

Ethirneechal: குணசேகரன் கொலைகாரன்.. உண்மையை உடைத்த சக்தி.. அதிர்ச்சியில் ஞானம் விசாலாட்சி!

ஈஸ்வரி சத்தம் போடுவதைக் கேட்டு அனைவரும் மாடிக்கு வருகிறார்கள். பேச்சு முத்திப்போக சக்தி உண்மையை உடைக்கிறான். "அந்த மனுஷன் ஜீவானந்தத்தின் பொண்டாட்டியை கொன்னது உங்க அண்ணன் தான். அன்னைக்கு மட்டும் போலீசுக்கு போய் இருந்தோம் என வை, இன்னைக்கு உன்னோட பிள்ளைங்க எல்லாம் ஜெயிலுக்குள்ள இருந்து இருப்பாங்க" என சொன்னதும் ஞானமும் விசாலாட்சி அம்மாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதை நம்பாத ஞானம் "என்ன எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுறீங்களா?" எனக் கேட்க, கோபமான ரேணுகா "உங்க அண்ணன் வேட்டியை பிடுச்சுக்கிட்டு சுத்தி வரல. ஜீவானந்தம் பொண்டாட்டியை யார் கொன்னதுனு போய் கேளு" எனக் கத்துகிறாள். குழம்பி போய் நிற்கிறான் ஞானம். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ

சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை

RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு

Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க

Embed widget