மேலும் அறிய

Ethirneechal : சடலத்தை பார்த்து அடையாளம் சொல்லும் ஜனனி... அண்ணனின் சுயரூபத்தை பார்த்த தம்பிகள்... பரபரப்பில் எதிர்நீச்சல் 

Ethirneechal : பெண்ணின் சடலத்தை பார்த்து அடையாளம் சொல்ல துணிந்த ஜனனி. தம்பிகளிடம் தன்னுடைய சுயரூபத்தை காட்டிய  குணசேகரன். எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது. 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 26) எபிசோடில் தர்ஷினியை கடத்தியவர்கள் வந்த கார் நம்பரை வைத்து அந்த கார் எங்கு இருக்குறது என்ற விலாசத்தை கண்டுபிடித்துவிட்டதாக ஓடி வந்து தகவல் சொல்கிறான் சக்தி. பெண்கள் அனைவரும் சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் சக்தி ஓடி வந்து இந்த தகவலை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உடனே அந்த இடத்துக்கு சென்று தர்ஷினியை மீட்டு விடலாம் என நம்பிக்கையுடன் கிளம்புகிறார்கள்.

Ethirneechal : சடலத்தை பார்த்து அடையாளம் சொல்லும் ஜனனி... அண்ணனின் சுயரூபத்தை பார்த்த தம்பிகள்... பரபரப்பில் எதிர்நீச்சல் 

தர்ஷினி அடியாட்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அப்போது அவளை கடத்தி வைத்து இருந்த அந்த ரவுடி பெரிய கட்டையால் தர்ஷினியை தாக்க வருகிறான்.

மறுபக்கம் ஜனனிக்கு இன்ஸ்பெக்டரிடம் இருந்து போன் ஒன்று வருகிறது. அங்கே ஒரு பெண் இரும்பு ராடால் தாக்கப்பட்டு இறந்து கிடப்பதாகவும் அது தர்ஷினியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வந்து சடலத்தை பார்த்து அடையாளம் காட்ட சொல்லி சொல்கிறார். இன்ஸ்பெக்டர் சொன்ன இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal : சடலத்தை பார்த்து அடையாளம் சொல்லும் ஜனனி... அண்ணனின் சுயரூபத்தை பார்த்த தம்பிகள்... பரபரப்பில் எதிர்நீச்சல் 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான பரபரப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

விசாலாட்சி அம்மா தன்னுடைய தம்பி சாமியாடியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். கதிரும் ஞானமும் ரூமில் இருந்து வெளியில் வர, விசாலாட்சி அம்மா கதிரை பார்த்து "அது என்னோட மகன் கதிரே இல்லை, நந்தினியோட புருஷன்" என சொல்லி முகத்தை திருப்பி கொள்கிறார். "எங்க வீட்டு பிள்ளையை  நாங்களே தேடி கூட்டிட்டு வரோம்" என சொல்லி கதிரும் ஞானமும் கிளம்ப அப்போது மாடியில் இருந்து குணசேகரன் இறங்கி வந்து "யார் வீட்டு பிள்ளையை யார் தேடுறது?" என மிரட்டலாக சொல்ல, கதிருக்கும் ஞானத்திற்கும் அண்ணன் அப்படி பேசியது அதிர்ச்சியாக இருந்தது.

Ethirneechal : சடலத்தை பார்த்து அடையாளம் சொல்லும் ஜனனி... அண்ணனின் சுயரூபத்தை பார்த்த தம்பிகள்... பரபரப்பில் எதிர்நீச்சல் 
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு அனைவரும் சக்தியுடன் வருகிறார்கள். முகத்தை பார்த்து அடையாளம் காட்டினால் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என இன்ஸ்பெக்டர் சொல்லவும் அனைவரும் அதை செய்ய தயங்குகிறார்கள். ஈஸ்வரி பதைபதைப்புடன் நந்தினியின் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறாள். அனைவருக்கும் ஒரே படபடப்பு. அது தர்ஷிணியாக இருக்காது என்ற நம்பிக்கை இருந்தாலும் அடையாளம் பார்த்து சொல்ல படபடப்புடன் ஜனனி திரையை விலக்கி அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். அத்துடன் இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.

தர்ஷினி குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் அந்த ரவுடிகளை எதிர்த்து சண்டை போட்டு தப்பித்து இருப்பாள் என எதிர்பார்த்த ரசிகர்கள் இந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது நிச்சயமாக தர்ஷிணியாக இருக்காது என்றாலும் சீரியலில் நடிப்பவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கு அந்த படபடப்பு ஒட்டிக்கொள்கிறது.

தம்பிகளுக்கு இப்போது தான் அண்ணனின் உண்மையான சுயரூபம் என்ன என்பது தெரிய வருகிறது. நாளுக்கு நாள் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் பரபரப்பு எகிறி கொண்டே போகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget