மேலும் அறிய
Advertisement
Ethirneechal: தர்ஷினியை காணவில்லை... பதட்டத்தில் ஈஸ்வரி... குணசேகரன் செய்த அடாவடித்தனம்... எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal : தர்ஷினியை காணவில்லை என அனைவரும் பதட்டமாக இருக்க குணசேகரன் செய்த காரியம் என்ன தெரியுமா? எதிர்நீச்சலில் தொடரும் பரபரப்பு...
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனியின் தங்கை அஞ்சனா தன்னுடைய காதல் விஷயத்தை பற்றி பார்வதியிடம் சொன்னதும் அவள் கோபப்பட்டு அஞ்சனாவை அடிக்கிறார். ஜனனி அம்மாவை சமாதானம் செய்துவிட்டு அஞ்சனா விரும்பும் அந்த பையனிடம் நடந்ததை பற்றி சொல்கிறாள். அந்த பையன் மிகவும் தெளிவாக நான் என்னுடைய வீட்டில் சம்மதம் வாங்கிய பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என சொல்கிறான். பார்வதி இனி அனைத்து முடிவுகளையும் ஜனனியிடம் ஒப்படைகிறாள்.
அஞ்சனா விரும்பும் அந்த பையன் மெய்யப்பன் குடும்பத்தின் வாரிசு. உமையாள் மகன் மிதுனை தான் அஞ்சனா விரும்புகிறாள். அவன் வீட்டுக்கு சென்றதும் அனைவரும் அவனை வரவேற்கிறார்கள். ராமசாமி, கிருஷ்ணாசாமி, கீர்த்தி மற்றும் மிதுன் மூவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாக சொல்கிறார் அப்பத்தா.
பள்ளியில் கோச் பேசியதை நினைத்து தர்ஷினி மிகவும் வருத்தப்பட்டு அழுது கொண்டு இருக்கிறாள். அவளுடைய தோழி வந்து பேசியும் தர்ஷினி எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லை. பள்ளியில் இருந்து கிளம்பி விடுகிறாள். ஈஸ்வரியும் நந்தினியும் தர்ஷினியை தேடி பள்ளிக்கு வந்து கோச்சிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். தர்ஷினி பள்ளியிலிருந்து வெளியே சென்றதை பற்றி தர்ஷினியின் தோழி சொல்ல அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி தர்ஷினிக்கு போன் செய்கிறாள் ஆனால் தர்ஷினி போனை எடுக்கவில்லை.
தர்ஷினி அழுது கொண்டே செல்வதை பார்த்த மர்ம நபர்கள் அட்ரஸ் கேட்பது போல அவளை கடத்தி சென்று விடுகிறார்கள். ஈஸ்வரி போன் செய்து பார்க்க வேறு ஒருவர் போனை எடுத்து பேசுகிறார். அதை அறிந்த ஈஸ்வரி அதிர்ச்சியில் அவர் சொன்ன இடத்துக்கு செல்ல அங்கே போனும் ஷூவும் கிடந்ததை பார்த்து ஈஸ்வரியும் நந்தினியும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினியை காணவில்லை என்ற தகவலை வீட்டில் இருக்கும் ரேணுகா , குணசேகரனிடம் சென்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த நேரத்தில் கூட "அப்போ என்னோட கல்யாணம்" என கரிகாலன் கேட்க குணசேகரன் அவனை ஓங்கி அறைகிறார்.
ஜனனி ரேணுகாவுக்கு போன் செய்து குணசேகரனிடம் கொடுக்க சொல்கிறாள். குணசேகரனிடம் ஈஸ்வரி அழுது கொண்டே ஆவேசமாக பேசுகிறாள். "கண்டதையும் பேசி, என்னோட பிள்ளை மனச நோகடிச்சு அனுப்பிட்டீங்களே. இன்னும் என்ன பாக்கி இருக்கு உங்களுக்கு" என தலையில் அடித்து கொண்டு அழுகிறாள் ஈஸ்வரி.
தர்ஷினியை விரும்புவதாகச் சொல்லி ஒரு பையனை டிராமா போட தர்ஷினி அழைத்து வந்த பையன் வீட்டுக்கு சென்ற குணசேகரன் அவனை மிரட்டுகிறார். "ஏய்! என்னோட மகளை காணோம். நீ தான் எங்கேயோ வைச்சு இருக்க" என மிரட்ட அந்த பையன் சொன்னதை கேட்டு குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion