Ethirneechal: போலீசுடன் வீட்டுக்கு வந்த ஆதிரை.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து காத்திருக்கும் பிரச்சினைகள்..!
Ethirneechal : குணசேகரன் வீட்டில் அடுத்தடுத்து நடக்கபோகும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போகிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) தேதி ஒரு மணி நேர ஸ்பெஷல் ஒளிபரப்பு தொடர்பாகவும் ப்ரோமோ வெளியானது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் ஜனனியின் அம்மாவை சக்தி வீட்டுக்கு அழைத்து வந்ததால் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் சக்தி அதை ஆவேசத்துடன் எதிர்கொண்டதால் அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள்.
குணசேகரன் மற்றும் அவரின் தம்பிகள் ஞானம் மற்றும் கதிர் மீது ஆதிரை வழக்கு பதிவு செய்துள்ள தகவலை விசாலாட்சி அம்மாவிடம் ஞானம் சொல்ல அதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் இந்த விஷயம் அங்கிருந்த நந்தினிக்கும், சக்திக்கும் சந்தோஷமாக இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 4 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனியுடைய அம்மா வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட ஞானம் எகிறுகிறான். "திரும்பவும் அப்பத்தா மேட்டரை வெளியில் எடுத்து விட்டேன் எல்லாரும் உள்ள போக வேண்டி இருக்கும்" என சரியான பதிலடி கொடுத்து மிரட்ட அப்படியே ஞானமும் கதிரும் ஆஃப்பாகி விடுகிறார்கள்.
ஆதிரையை அழைத்து கொண்டு சாருபாலா குணசேரன் வீட்டுக்கு வருகிறார். உடன் பாதுகாப்புக்காக ஒரு இன்ஸ்பெக்டரையும் அழைத்து வந்துள்ளார்கள். இன்ஸ்பெக்டரை வெளியில் நிற்க வைத்து விட்டு ஆதிரையும் சாருபாலாவும் வீட்டுக்குள் செல்கிறார்கள். அவர்களை பார்த்து வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சாமி கும்பிட்டு கொண்டு இருந்த விசாலாட்சி அம்மாவை போய் ஆதிரை கூப்பிட்டதும் அதிர்ச்சியுடன் அவர் திரும்பி பார்க்கிறார். ஜனனி சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்து இருக்கிறாள். "எனக்காக எல்லாம் சக்தி என்ன பண்ணிடுவான் என யோசித்து இருக்கேன். ஆனா அவன் உன்னோட குடும்பமும் என்னோட குடும்பம் தான் என எல்லாரையும் எதிர்த்ததில் இருந்தே தெரிகிறது. இவன் தான் நியாயமான பாசக்காரன். பேசிக்கிட்டே இருக்கும் போது சாதாரணமா ஒரு வார்த்தையை சொல்லிட்டான். அதை நான் சாகும் வரைக்கும் மறக்கவே மாட்டேன். நீ என்னை ஒரு தரம் காயப்படுத்தி வீட்டை விட்டு அனுப்பிவிட்டுட்ட என நான் உன்ன ஆயிரம் தடவை காயப்படுத்திவிட்டேன்" என தன்னுடைய காதலை சக்தியிடம் வெளிப்படுத்திவிட்டாள் ஜனனி. இருவரும் சேர்ந்து அவர்களின் வாழ்க்கையை துவங்க போகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இத்தனை நாட்களாக எதிர்நீச்சல் சீரியலில் எத்தனையோ பிரச்சினைகள் வந்துள்ளது. ஆனால் இப்போது பல பிரச்சினைகள் ஒரே நேரத்தில் குணசேகரன் வீட்டில் வெடிக்கிறது. ஆதிரை குணசேகரன் மீது புகார் கொடுத்துள்ளதால் போலீஸ் அவரை தேடி கொண்டு இருக்கிறது. ஈஸ்வரியின் எலெக்ஷன் டென்ஷன் மறுபக்கம் என்றால் நாச்சியப்பன் செய்த துரோகத்தால் ஜனனியின் அம்மாவின் நிலை, ஜனனிக்கு பேக்டரி கையை விட்டு போனது என பல பிரச்சினைகள் ஒரே நேரத்தில் சுத்தி சுத்தி அடிக்கின்றன.
இது அனைத்திற்கும் விடை தெரிவதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) ஒரு மணி நேர ஸ்பெஷல் ஒளிபரப்பு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதை அறிவிப்பினை புதிய ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. அனேகமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த கேள்விகள் அனைத்திற்கும் இந்த எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.