Ethirneechal: அதிர்ச்சி கொடுக்கும் சக்தி.. ஜீவானந்தம் பற்றிய அப்டேட்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
Ethirneechal :வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியான விஷயத்தை சொன்ன சக்தி. ஜீவானந்தம் குறித்து அதிகாரிக்கு ஏற்பட்ட குழப்பம். எப்படி சமாளிக்கிறாள் சக்தி. எதிர்நீச்சலில் இன்று
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 26) எபிசோடில் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் வீரசங்கிலி, தர்ஷினியை மிரட்டுகிறான். அவன் குரல் கேட்டதும் தர்ஷினி அந்த வீடியோவில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறாள். அவளுக்கு ஏதோ ஒரு பவுடரை தண்ணீரில் கலந்து வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி கொடுக்கிறார்கள். அதை அவள் குடித்ததும் அப்படியே புலம்பிக்கொண்டே மயங்கி விழுகிறாள் தர்ஷினி.
வீட்டில் விசாலாட்சி அம்மா மிகவும் வருத்தமாக இருக்கிறார். அப்போது அவருடைய தம்பி சாமியாடி வருகிறார். அவரிடம் வீட்டில் நடந்ததை சொல்கிறார்கள். ஈஸ்வரி தான் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறாள் என இன்னும் நம்புகிறார் விசாலாட்சி அம்மா. எனக்கு தர்ஷினி நினைப்பாகவே இருக்கு என சொல்லி அழுகிறார். அப்போது குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். "அந்த ஜீவானந்தம் போலீசிடம் இருந்து தப்பிச்சுட்டானாம். நான் உடனே கிளம்புறேன். நான் என்னோட பொண்ணை காப்பாத்தணும் " என கிளம்புகிறார். ஞானம், கதிர் "இந்த விஷயம் எல்லாம் எப்படி உங்களுக்கு தெரிய வந்துச்சு?" என கேள்வி கேட்க அவர்களிடம் குணசேகரன் எகிறுகிறார். தர்ஷன் நானும் வருகிறேன் என சொல்ல அவனையும் அசிங்கமாக திட்டுகிறார் குணசேகரன்.
ஜனனி, ஸ்பெஷல் அதிகாரியிடம் தர்ஷினியை எப்படி கண்டுபிடிக்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? என கேட்கிறாள். அவரும் தர்ஷினிக்கு என்ன நடந்து இருக்கலாம் என தன்னுடைய யூகங்களை சொல்கிறார். "அவளுடைய வீடியோ மூலம் தர்ஷினி சுயநினைவில் இல்லை என்பது புரிகிறது. அவள் மனரீதியாகவும் மிகவும் வீக்காக இருக்கிறாள்" என அதிகாரி சொல்கிறார். ஜனனி பழைய விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்து பதட்டப்படுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தாராவின் ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும் என நந்தினி கதிரிடம் சொல்லி கொண்டு இருக்கிறாள். அப்போது ஞானம், மாமியார் கொடுத்த பணத்தில் இருந்து கொண்டு வந்து கதிரிடம் கொடுத்து பீஸ் கட்ட சொல்லி கொடுக்கிறான். ஆனால் நந்தினி அதை தடுத்துவிடுகிறாள். அதற்கு ஏதோ காரணமும் சொல்கிறாள். அந்த நேரத்தில் சக்தி வீட்டுக்கு வருகிறான். அவன் சொன்னதை கேட்டு ஞானம் வருத்தப்பட்டு பேசுகிறான். நான் ஒன்னு சொல்கிறேன் அதை எல்லாரும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க என சக்தி எதையோ அவர்களிடம் சொல்கிறான்.
ஜீவானந்தம் எஸ்கேப்பான விஷயம் நமக்கு தடையாக இருக்க கூடாது என ஸ்பெஷல் பெண் அதிகாரி ஜனனியிடம் சொல்கிறார். "அப்படி எல்லாம் எதுவும் நடக்காது" என ஜனனி நம்பிக்கையுடன் சொல்கிறாள். அவர்கள் தீவிரமாக தர்ஷினியை தேடுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.