Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal: பிரச்சினையை ஊதிப் பெருசாக்க குணசேகரன் வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்.. கோபத்தில் கொந்தளித்த கதிருக்கு கடைசியில் மிஞ்சியது அவமானம் தான்.. இன்றைய எதிர்நீச்சல் என்ன நடக்கிறது?
![Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று! Sun tv ethirneechal serial today episode february 22 promo Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/f0aba5eff7cbe06f990af520e74cf34b1708584020491224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்.21) எபிசோடில் ஜனனியும் சக்தியும் சென்னையில் சி.எம் செல் தலைமை அதிகாரியை சந்தித்து தர்ஷினி காணாமல் போனது, குணசேகரன் வீட்டுப் பெண்கள் மீது புகார் கொடுத்தது என அனைத்தையும் சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கிறார்கள். அவரும் கவலைப்பட வேண்டாம் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
வீட்டில் தாரா நந்தினியின் நகைகளை கழட்டித் தரச் சொல்லி கேட்கிறாள். "இந்த நகைகளை நாம எப்போ வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். என்றாவது ஒரு நாள் இத்தனை நாள் இந்த வீட்டில் சாப்பிட்டதற்கு பெரியப்பா கணக்கு சொல்வார். இந்த நகைகளை கொடுத்து விடலாம்" என சொல்லி கதிரை விட்டு மஞ்சள் கயிறு ஒன்றை நந்தினி கழுத்தில் கட்டி விடச் சொல்லி, நகைகளை வாங்கிக் கொண்டு போய் குணசேகரனிடம் கொடுக்கிறாள் தாரா.
![Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/1fcd957618c8909bc2e03406ead0fd9b1708583911681224_original.jpg)
ஈஸ்வரியும், ஜீவானந்தத்தையும் நீதிபதி முன்னால் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். ஈஸ்வரி நீதிபதியிடம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அனைத்தையும் பற்றி சொல்கிறாள். "தர்ஷினியைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய பொண்ணை தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள்" என கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரனை சந்திக்க நாச்சியப்பனின் அம்மா, ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். "இத்தனை வருஷமா உன்னோட வாழ்ந்த உன்னோட பொண்டாட்டியே இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்காளே" என குணசேகரனை உசுப்பேத்தி விடுகிறார் நாச்சியப்பனின் அம்மா. அந்த நேரம் பார்த்து ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வந்து அவர்கள் வந்திருப்பதைப் பற்றி கேட்டதும் கோபத்துடன் வீட்டுக்குள் சென்று "இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?" என ஜனனி அதட்டிக் கேட்க, குணசேகரன் அவளைப் பார்த்து முறைக்கிறார்.
![Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/30f77babd08886053a53a354bf64c3141708583925763224_original.jpg)
அந்த நேரத்தில் ரேணுகாவின் அம்மா வீட்டுக்கு வந்து ரேணுகாவுக்கும் ஞானத்துக்கும் பணம் கொடுக்கிறார். அதைப் பார்த்த குணசேகரன் நக்கலாக "அடி சக்க, அப்படி போடு" என கிண்டலடிக்க, கோபத்தில் ரேணுகா "இது எங்க அம்மா வீட்டு காசு. அவங்களா விருப்பப்பட்டு கொடுக்குறாங்க. உங்கள மாதிரி அடிச்சு புடுங்கல" எனக் கொந்தளிக்கிறாள்.
குணசேகரன் கோபமாகப் பேச "இந்த மாதிரி சின்ன பசங்க கிட்ட எதுக்கு சார் நீங்க கோபப்படறீங்க. நாங்க இருக்கோம் சார்?" என ராமசாமி திமிராகப் பேசுகிறான். அவன் சட்டையை எகிறிக்கொண்டு போய் பிடித்த கதிர் "என்னடா என்ன பேசிகிட்டு இருக்க" எனவும், கதிரை மிரட்டி சட்டையை விடச் சொல்கிறார் குணசேகரன். இதை சற்றும் எதிர்பார்க்காத கதிர் அதிர்ச்சியுடன் குணசேகரனைப் பார்க்கிறான். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)