Ethir neechal August 22 promo: நந்தினி செய்த தரமான சம்பவம்... இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் நடக்கப்போவது இதுதான்..!
Ethir neechal August 22 promo:*ஜனனியை போட்டு கொடுத்த கதிர்* குணசேகரனை மாறிவிட்ட நந்தினி* கோபத்தில் அண்ணனையே மிரட்டிய கதிர்இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் அப்டேட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் ஜீவானந்தத்தை சுட முடியாமல் போனதை நினைத்து மிகவும் கடுப்பாகி வளவனை வாய்க்கு வந்த படி திட்டுகிறான். வளவனும் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் சுட்டுத் தள்ளிவிட்டு போய்கிட்டே இருப்பேன் என எச்சரித்தும் கதிர் அடங்கவில்லை.
ஜீவானந்தம் வீட்டில் ஊர் மக்கள் கூடி இருப்பார்கள் அதனால் இப்போது அங்கு சென்றால் பிரச்சினை பெரிதாகிவிடும் அதனால் இப்போது கிளம்பலாம் வேறு ஒரு நாள் பார்த்து கொள்ளலாம் என சொல்லிவிட்டு கவுஞ்சியில் இருந்து திரும்புகிறார்கள்.
ஜீவானந்தம் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து கொல்லி வைக்கிறார். ஜனனியும் அங்கே தான் இருக்கிறாள். மன்னிப்பு கேட்ட ஜனனியிடம் தனது மனைவி பற்றியும், கொள்கை பற்றியும் ஜீவானந்தம் சொல்லி என் மனைவியை கொலை செய்தவர்களை நான் பழிவாங்காமல் விட மாட்டேன் என சபதமிடுகிறார்.
குணசேகரன் அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் ரூமில் போட்டு அடைத்து வைத்து வாசலில் சேர் போட்டு அமர்ந்து கொண்டு இருக்கிறார். காரணம் கேட்பவர்களை திட்டி அடக்கி விடுகிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனி, கயலின் இறப்பை நினைத்து வருத்தத்துடன் ஊர் திரும்பி கொண்டு இருக்கிறாள். போன் மூலம் கதிர், குணசேகரனிடன் கவுஞ்சியில் என்ன நடந்தது என்பதை சொல்கிறான். அப்படி அவன் பேசுகையில் ஜனனியை ஜீவானந்தம் வீட்டில் பார்த்ததை பற்றியும் சொல்கிறான். அதை கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். "அவ எதுக்கு அங்க வந்தா" என கேட்கிறார். "அவ தான் அண்ணன் உள்ளே பூந்து எல்லாத்தையும் சொதப்பிட்டா" என கதிர் சொல்கிறான்.
வீட்டுக்கு கதிர் வந்து இறங்க அனவைரும் வாசலில் நிற்கிறார்கள். குணசேகரனும் அங்கே வருகிறார். அப்போது நந்தினி கதிரின் சட்டையை பிடித்து "நீங்க பொணமா தான் வருவீங்கன்னு சொன்னாரு. இதை சொன்னா உங்களுக்கு வலிக்குமா என தெரியல எனக்கு வலிச்சுது" என நந்தினி கண்ணீர் மல்க கதிரிடம் நியாயம் கேட்கிறாள். நந்தினி சொல்வதை கேட்டு கோபமான கதிர் குணசேகரனை பார்த்து முறைக்கிறான். குணசேகரன் அருகே சென்று "என்ன சொன்னீங்க அவகிட்ட. ஏன் அப்படி சொன்னீங்க, கேக்குறேன்ல" என மிரட்டலாக கத்துகிறான்.
அவன் அப்படி அண்ணனை எதிர்த்து பேசுவதை யாரும் எதிர்பார்க்காததால் கதிர் கோபமாக பேசியதை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

