EthirNeechal promo: ஜனனிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி...பரபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன?
Ethir neechal August 14 promo:* கவுஞ்சிக்கு வந்த கதிர் வளவன்* ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு முதியவர் சொன்ன அதிர்ச்சியான தகவல்இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ வெளியானது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் மற்றும் கதிர், வளவனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் வளவன் வந்து "ஜீவானந்தம் பற்றின அனைத்து தகவல்களையும் சேகரிச்சாச்சு. அவனுக்கு மிக அருகில் போயாச்சு. அவன் அடிக்கடி செல்லும் ஒரு இடத்தை பற்றி தெரியவந்துள்ளது" என சொல்லி கதிரையும் தன்னுடன் அழைத்து செல்கிறார். குணசேகரன் கதிரை பார்த்து கவனமாக இருக்க சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் ஜீவானந்தம் அவரின் அமைப்பில் உள்ள அனைவருக்கும் வேலையை கொடுத்துவிட்டு ஒரு மூன்று நாட்கள் தன்னுடைய பர்சனல் வேலைக்காக வெளியூர் செல்வதாக சொல்லி விட்டு செல்கிறார். ஜனனி கவுஞ்சி சென்று அங்கு ஒரு டீ கடையில் இருந்தவர்களிடம் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என சொல்கிறாள். அவர்கள் அப்படி எல்லாம் யாரும் இல்லை என சொல்லி கிளம்ப சொல்கிறார்கள். ஜனனி விடாபிடியாக அவரை எத்தனை நாட்கள் ஆனாலும் சந்திக்காமல் நான் இந்த ஊரை விட்டு செல்ல மாட்டேன் என பிடிவாதமாக உட்கார்ந்து கொள்கிறாள் .
அப்பா வீட்டுக்கு சென்ற ஈஸ்வரி வீடு திரும்புகிறாள். ரேணுகாவும், நந்தினியும் அவளிடம் சக்திக்கு அம்மை போட்டு இருப்பதை பற்றியும் ஜனனியை ஜீவானந்தம் பற்றி விசாரிக்க சக்தி தனியாக அனுப்பி வைத்துள்ளான் என்றும் கூறுகிறார்கள். "நானே சக்தியை பார்த்துக்கொள்கிறேன்" என ஈஸ்வரி சொல்கிறாள். ஜனனி சக்தியை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறாள். அவனுக்கு போன் மூலம் அவள் இங்கு யாரும் எந்த தகவலும் சொல்லவில்லை என சொல்கிறாள். ஈஸ்வரி ஜனனியிடம் "நீ உடனே கிளம்பி வா" என சொல்கிறாள். "ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொள்ளாமல் இங்கு இருந்து ஊர் திரும்ப மாட்டேன்" என்கிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கதிர் மற்றும் வளவன் கவுஞ்சிக்கு வந்து விட்டார்கள். வளவன் கதிரின் லீலைகளை பற்றி சொல்லி கொண்டு வருகிறார். "நீ குத்தாலத்துல போய் கூடி கும்மாளம் முடிச்சதும் தெரியும், உன்னோட அண்ணனுக்கு கூட தெரியாம இரண்டு நாள் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தியே அதுவும் எனக்கு தெரியும்" என சொல்லி கதிரை மடக்குகிறார்.
டீ கடையில் ஜனனி விசாரித்து கொண்டு இருக்கும் போது அவர்களை ஒரு முதியவர் பார்த்துக்கொண்டே இருந்தார். அவரை ஜனனி சந்தித்து பேசுகிறாள். "எனக்கு ஜீவானந்தத்தை பற்றி தகவல் கிடைக்காமல் நான் இங்க இருந்து போகமாட்டேன்" என்கிறாள். அந்த முதியவர் " நீங்க நினைச்ச நேரத்தில் எல்லாம் அவரை பார்க்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி" என்கிறார். அதை கேட்டு ஜனனி குழப்பத்தில் கலங்கி போய் நிற்கிறாள்.
ஜனனிக்கு ஜீவானந்தம் பற்றின ஏதாவது தகவல் கிடைக்குமா? கதிரும் வளவனும் ஜனனியை கவுஞ்சியில் சந்திப்பார்களா? குழப்பத்தில் இருக்கும் ஈஸ்வரி ஜீவானந்தம் பற்றி தனக்கு தெரிந்த உண்மைகளை வெளியே சொல்வாளா? பரபரப்பாக நகரும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரில் இனி வரும் எபிசோட்களில் இதற்கான விடை கிடைக்கும் என்பது தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.