மேலும் அறிய

Siragadikka Aasai serial Today June 14 : சிக்கலில் இருக்கும் ரோகிணி சிட்டியிடம் கேட்கும் உதவி என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று 

Siragadikka Aasai serial today : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today June 14 Episode : சிறகடிக்க ஆசை இன்றைய (ஜூன் 14) எபிசோடில் ரோகிணியிடம் பணம் பறிப்பதற்காக அந்த பிஏ கஸ்டமரைப்போல பொருட்களை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

ரோகிணியை பார்த்ததும் "பெரிய ஷோரூம் திறந்து செட்டிலாகிட்டபோல. எனக்கு இப்போ பணம் வேணும்" என மிரட்டுகிறான். "இப்போ தான் மனோஜ் கிட்ட பொய் சொல்லி ஒரு லட்சம் வாங்கி கொடுத்தேன். இனி என்கிட்டே பணம் இல்ல" என ரோகிணி சொல்கிறாள். "பணம் கொடுக்க முடியாது என்றாலும் பரவாயில்லை. என்னோட கல்யாணத்துக்கு சீர்வரிசையா காஸ்ட்லியான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி எல்லாம் எடுத்துக்குறேன். அதுக்கான பணத்தை நீ குடுத்துடு" என்கிறான்.

முதலில் முடியாது என சொன்ன ரோகிணி பின்னர் அவன் மனோஜிடம் பேசி கொள்கிறேன் என சொன்னதும் சரி என ஒத்துக்கொள்கிறாள்.

Siragadikka Aasai serial Today June 14 : சிக்கலில் இருக்கும் ரோகிணி சிட்டியிடம் கேட்கும் உதவி என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று 

பிஏ அந்த பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு செல்வதை மனோஜ் பார்த்து பெரிய கஸ்டமர் கிடைச்சு இருக்காரு. நல்ல லாபம் வந்து இருக்கும் என நினைத்து உள்ளே போய் கல்லாவை திறந்து பார்க்கிறான். பணம் இல்லாதால் ரோகிணியிடம் கேட்க "அவர் என்னோட கிளைன்ட் கணவர்தான். ஈஎம்ஐல வாங்கிட்டு போறார்" என சொன்னதும் மனோஜ் ரோகிணியை சத்தம் போடுகிறான்.

"அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை. சரி நான் அவருக்கு போன் பண்ணி எல்லா பொருளையும் கொண்டு வந்து திரும்ப குடுத்துட சொல்றேன்" என மனோஜிடம் சொல்ல "இல்லை வேண்டாம். உனக்கு தெரிஞ்சவங்கனா அவங்க நல்லவங்களா தான் இருப்பாங்க" என சொல்கிறான் மனோஜ். எப்படியோ மனோஜை சமாளித்த ரோகிணி, வித்யாவுக்கு போன் செய்து உடனே வர சொல்கிறாள். 

நடந்த விஷயத்தை ரோகிணி வித்யாவிடம் சொல்ல இருவரும் சேர்த்து என்ன செய்யலாம் என பிளான் போடுகிறார்கள். பின்னர் சிட்டியிடம் சென்று உதவி கேட்கிறார்கள். "அடிக்கடி ஒருத்தன் என்னை தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறான். அவனை கொஞ்சம் தட்டி இனிமேல் என் பக்கம் வராத படி மிரட்டணும்" என சொல்லி சிட்டியிடம் அந்த பி.ஏ போட்டோவை காட்டுகிறாள் ரோகிணி.

"இவனுக்கு உங்களை பற்றின ஏதோ ஒரு விஷயம் தெரிஞ்சு இருக்கு. அதனால தான் அவன் உங்களை மிரட்டுகிறான். அது என்ன விஷயம்" என சிட்டி ரோகிணியிடம் கேட்க "அதுக்கு நான் போலீஸ் கிட்டேயே போயிருப்பேன் உன் கிட்ட எதுக்கு வந்து உதவி கேட்கப் போறேன். முடிஞ்சா பண்ணு இல்லாட்டி பரவால்ல" என ரோகிணி சொல்ல "நீங்க கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன். இது உதவி தான் பணம் எதுவும் வேண்டாம்" என சொல்லி ரோகிணியையும் வித்யாவையும் அனுப்பி வைக்கிறான் சிட்டி. "சத்யாவை வைச்சு இனிமேல் முத்துவை ஒன்னும் பண்ண முடியாது. இவ அந்த முத்துவோட அண்ணன் பொண்டாட்டி தான். இவளை வைத்து முத்துவை பழிவாங்கலாம்" என சிட்டி பிளான் போடுகிறான். 

மீனாவும் ஸ்ருதியும் ஜாலியாக கிச்சனில் பேசி கொண்டு இருப்பதை விஜயா வெளியில் இருந்து கேட்டு கடுப்பாகிறாள். "நீங்க எப்படி மீனா உடனே சமாதானம் ஆயிடுறீங்க. எனக்கே பல தடவை ஆண்ட்டி உங்களை திட்டும் போது கோவமா வரும்" என சொல்ல "அப்போ உங்களுக்கு இது மாதிரி நடந்த நீங்க என்ன பண்ணுவீங்க?" என மீனா ஸ்ருதியிடம் கேட்கிறாள்.

"என்னை இப்படி எல்லாம் திட்டினா ஒன்னு அவங்க காதுல புகை வர அளவுக்கு கலாய்த்து விடுவேன். இல்லாட்டி எக்ஸ் மாதிரி சூடு போட்டு விடுவேன்" என சொல்ல விஜயாவுக்கு ஆத்திரமாக வருகிறது. விஜயாவை பார்த்ததும் ஸ்ருதி அங்கிருந்து கிளம்ப விஜயா மீனா தான் ஸ்ருதியை அவளுக்கு எதிராக திருப்பிவிடுகிறாள் என சொல்லி அவளை திட்டுகிறாள்.

சிட்டி ஆபிஸுக்கு வந்த பி.ஏ "என்னை எதுக்கு இங்க வர சொன்னீங்க?" என கேட்க சிட்டி அவனை அடித்து மிரட்டுகிறான் அதற்குள் அந்த பி.ஏ அங்கிருந்து தப்பித்து பைக்கில் வேகமாக செல்கிறான். சிட்டி விரட்டிக்கொண்டு போகிறான். குறுக்கே வந்த ஒரு பாட்டியை அந்த பி.ஏ இடித்துவிட்டு நிறுத்தாமல் செல்ல அந்த வழியாக வந்த முத்துவும்  செல்வமும் அந்த பாட்டியை காப்பாற்றுகிறார்கள். முத்துவை பார்த்ததும் சிட்டி பைக்கை திருப்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget