மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai serial : முத்துவை அசிங்கப்படுத்திய ரோகிணிக்கு மீனா கொடுத்த பதிலடி - சிறகடிக்க ஆசை இன்றைய அப்டேட்
Siragadikka Aasai Today Episode Written Update May 11: கார் வாங்கிய மனோஜ் தம்பிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறேன் என அவனே மட்டையாகி விட்டு அலப்பறை செய்கிறான். இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கிறது.
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய (மே 11) எபிசோட் கதைக்களத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
மனோஜும் ரோகிணியும் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். மனோஜ் விஜயாவுக்கு போன் செய்து ஆரத்தி தட்டுடன் அனைவரையும் அழைத்து கொண்டு வீட்டு வாசலுக்கு வரச்சொல்கிறான். காருடன் வந்து இருக்கும் மனோஜை பார்த்து விஜயா பூரிக்கிறார்.
அண்ணாமலை காரின் விலையை பற்றி கேட்க "நாலு லட்சம். செகண்ட்ஸ் காரை ஒரு லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் மீதி பணத்தை தவணையாக கட்ட வேண்டும்" என மனோஜ் சொல்ல முத்து காரை சுத்தி பார்த்து "இந்த காருக்கு போய் நாலு லட்சம் கொடுத்து வாங்கி இருக்க. இது இரண்டரை லட்சம் கூட தேறாது" என சொல்கிறான். "இவரை அழைத்து சென்று காரை செக் பண்ணி வாங்கி இருக்கலாம் இல்லையா? இவருக்கு கார் பத்தி நல்லா தெரியும்" என மீனா சொல்ல ரோகிணி முத்துவை அவமானப்படுத்தி பேசுகிறாள்.
முத்துவும் ரவியும் மனோஜிடம் ட்ரீட் கேட்கிறார்கள். "நான் சும்மா உட்கார்ந்து இருக்கிறேன். இப்போ தான் ஒரு பிரச்சினை முடிஞ்சு இருக்கு நீங்க குடிங்க" என முத்து சொல்லிவிடுகிறான். மனோஜும் ரவியும் மட்டும் குடிக்கிறார்கள். அப்போது மனோஜ் என்ன பிசினஸ் செய்ய போகிறான் என்பதை பற்றி ரவி கேட்கிறான். அப்போது "எப்படியோ அவ கிட்ட இருந்து பணம் வந்துடுச்சு" என மனோஜ் உளற முத்து சந்தேகப்பட்டு "மாமனார் தான் காசு கொடுத்தாரு என சொன்ன?" என கேட்க திருதிருவென முழித்த மனோஜ் "ரோகிணி மூலமா வந்துச்சு இல்ல அது தான் சொன்னேன்" என சமாளிக்கிறான்.
ரவி ஹோட்டல் பிசினஸ் செய்ய சொல்ல முத்துவோ நாலு கார் வாங்கி விடச்சொல்கிறான். அவர்கள் இருவரும் இப்படியே மாத்தி மாத்தி ஏதேதோ ஐடியா கொடுக்க அது அனைத்தையும் ஏதாவது சொல்லி தட்டி கழிக்கிறான் மனோஜ். உட்கார்ந்த இடத்திலே பணம் வரணும் என மனோஜ் சொல்ல "அப்போ போய் முன்னாடி பண்ண மாதிரியே பிச்சை எடு" என முத்து சொல்ல ரவி வயிறுவலிக்க சிரிக்கிறான்.
ரோஹிணிக்கு மீனாவும் ஸ்ருதியும் சில பிசினஸ் ஐடியாக்களை சொல்ல "மனோஜுக்கு ஏத்த மாதிரி சொல்லுங்க" என சொல்கிறாள் ரோகிணி. அப்படியே பிசினஸ் பற்றி பேசி முத்து குடிப்பதை பற்றி பேசி மீனாவை வம்பிழுக்கிறாள் ரோகிணி. "எனக்கு நம்பிக்கை இருக்கு இன்னைக்கு அவர் குடிக்க மாட்டார் என எனக்கு தோணுது" என மீனா சொல்கிறாள்.
ஸ்ருதியும், ரோகிணியும் ரவிக்கும் மனோஜுக்கும் போன் செய்து உடனே கீழே வர சொல்கிறார்கள். மனோஜ் போதையில் தடுமாற ரவியும் முத்துவும் அவனை கையை பிடித்து அழைத்து செல்கிறார்கள். கீழே வரை கேட்கும் சத்தத்தை கேட்டு ரோகினி முத்து தான் கலாட்டா செய்வதாக சொல்ல மீனா முத்துவுக்கு சப்போர்ட் செய்கிறாள். போதையில் இருக்கும் மனோஜை இருவரும் தூக்கி வருவதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறாள். வீட்டுக்குள் வந்து அலப்பறை செய்யும் மனோஜை பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.

சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion