மேலும் அறிய

சிவபெருமான், கார்த்திகேயன் போரை யார் தடுக்கப் போகிறார்...? இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர்

சிவசக்தி திருவிளையாடல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர். எல்லோரின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வாரம் –

சனியின் பிடியில் சிக்கும் சிவன்

கார்த்திகேயன் – தேவயானை, திருமணத்திற்கு இந்திரன் மறுத்துவிடுகிரார். இதனால் கோபமடையும் கார்த்திகேயன் இந்திர லோகத்தில் இருந்து தேவயானையயை கடத்தி செல்கிறார். இதனை கண்ட சிவபெருமான் அவர்களை தடுக்கிறார். இதனால் கார்த்திகேயன், சிவபெருமான் மீது கோபம் கொள்கிறார். அவருடன் போருக்கு தாயாரகிறார். தந்தைக்கும் மகனுகும் இடையே போர்மூளும் சூழல் உருவாகிறது. அவர்களின் போரை தடுக்க வழி தெரியாமல் தேவர்கள் கலங்கி நிற்கிறார்கள். சிவபெருமான், கார்த்திகேயன் போரை யாரால் தடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது? அப்போது நாராயணர், நித்திரையில் இருக்கும் பார்வதியை எழுப்புகிறார். நடந்துகொண்டிருக்கும் சிக்கலை விளக்குகிறார். உடனே பார்வதி விரைந்து சென்று தந்தை, மகனுக்கிடையே நடக்க இருந்த சண்டையை நிறுத்துகிறார்.

 தேவசேனையை அங்கிருந்து செல்லும் படி அறிவுரை கூறுகிறார். அவளும் அதைக் கேட்டு அங்கிருந்து இந்திரலோகம் செல்கிறாள். அங்கு சகஜநிலை திரும்பும் சூழல் உருவாகிறது. ஆனால் அசுரலோகத்தில் சிக்கல் தீர்ந்து குடும்பம் ஒன்றாகிவிடுமோ என்று அசுரமாதா திதி  கோபமடைகிறாள். சனியிடம் ஏதாவது செய்து சிவன் குடும்பத்தை பிரிக்கும் படி சொல்கிறாள். சனியும் அவர் வேலையைத் தொடங்குகிறார்.

கார்த்திகேயன் தேவசேனாவை சந்திக்க முற்படுகிறான். தடுக்கும் பார்வதியை தான் என்ன தவறு செய்கிறோம் என்று தெரியாமல் கார்த்திகேயன் காயப்படுத்துகிறார். சிவன், கார்த்திகேயனுக்கு அவனின் தவறைப் புரியவைக்கிறார். மனம் வருந்திய கார்த்திகேயன், பார்வதியிடம் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்கிறார். ஸ்கந்தமாதாவாக பார்வதி உருவெடுத்து கார்த்திகேயனுக்கு அன்பைப் பொழிகிறார்.

சிவபெருமான் கார்த்திகேயன் மற்றும் அவரது பக்தர்களுடன் ஹோலி கொண்டாடுகிறார். அப்போது சிவபெருமான் கார்த்திகேயனிடம்,  அவர் அவன் மீது கொண்டுள்ள அக்கறையை விளக்குகிறார். கார்த்திகேயனும் சிவனின் வார்த்தைகளை பின்பற்ற ஒப்புக்கொள்கிறார்.  சிவன் கார்த்திகேயனை கைலாயத்தைவிட்டு, தேவ குரு பிரகஸ்பதியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று ஞானம் பெற்றுவரும் படி கூறுகிறார். ஆனால் அப்போது சனி மீண்டும் தன் வக்ரப் பார்வையை கார்த்திகேயன் மீது செலுத்துகிறார்.

கார்த்திகேயன் குணம் மீண்டும் மாறுகிறது.  சனியின் பார்வை மீண்டும் மோதலுக்கு வழிவகுக்கிறது. இதற்கிடையில், கார்த்திகேயன் தன்னை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதாக தேவசேனை நினைக்கிறாள்.  அவளைப் பார்வதியும் மற்ற கடவுளர்களும் உனக்கும் கார்த்திகேயனுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும், காலம் வரும்வரை காத்திரு என்று சமாதானம் செய்கிறார்கள். அவளும் அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்படுகிறாள். கார்த்திகேயன் இனிமேல் நான் கைலாயத்துக்கு வரமாட்டேன் என்று கூறி கோபமாகக் கிளம்புகிறான். பார்வதி மகனின் பிரிவால் கடும் வேதனை அடைகிறார். சிவன் குடும்பம் பிரிகிறது. அசுரர்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். சனியின் செயலைப் பாராட்டுகிறார்கள். இதனால் கடும் கோபம் கொள்ளும் சிவன் இந்த சிக்கல்களுக்கெல்லாம் காரணமான சனியை தண்டிக்கக் கிளம்புகிறார்.

சனி சிவனிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறார். சனி ஓடிச் சென்று நிற்கும் இடம் சனிகிரகம். சனியின் பலம் ஓங்கி நிற்கிறது. மேலும் சிவன் சனிக்கு கொடுத்த வரத்தின் படி சனியின் பார்வை சிவனின் மீது பதிகிறது. சனியின் பிடியில் சிவனும் சிக்குகிறார். இதைக்கண்டு அனைத்து கடவுளர்களும் திகைத்துப் போகிறார்கள். அசுரலோகத்தில் அத்தனை அசுரர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சனியின் பிடியில் இருந்து சிவன் எப்படி தப்பிக்கப் போகிறார்? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் கதை நகர்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பகும் சிவசக்தி திருவிளையாடல் தொடரில் காணத் தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget