Seetha Raman: மகாலட்சுமியை புலம்ப விட்ட சீதா.. ராமின் தங்கைகளுக்கு காத்திருந்த ஷாக் - சீதா ராமன் இன்று!
மகாலட்சுமி மூன்று பெண்கள் தன்னை விட்டுச் சென்று விடுவார்களோ என நினைத்து புலம்பித் தவிக்கிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா மூன்று பெண்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மகாலட்சுமி மூன்று பெண்கள் தன்னை விட்டுச் சென்று விடுவார்களோ என நினைத்து புலம்பித் தவிக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்பி “என்னை விட்டு போக மாட்டீங்க தானே?” என்று கேட்க, அவர்கள் “உங்களை விட்டு போக மாட்டேன் சித்தி.. நீங்க தான் எங்களுக்கு முக்கியம்” என எமோஷனலாக பேசுகின்றனர்.
இப்படியான நிலையில் மறுநாள் காலையில் சீதா பூஜை செய்யும் சத்தம் கேட்டு மகாலட்சுமி அர்ச்சனா ஆகியோர் எழுந்து கீழே மூன்று பெண்களும் சீதா உடன் சேர்ந்து பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர்.
அதைத் தொடர்ந்து மகா அர்ச்சனா தங்களது பக்கம் இருக்க முயற்சி செய்கின்றனர். இதற்கிடையில் அர்ச்சனா “நீ ஐபிஎஸ் பாண்டியன் போனால் தான் இருக்கு” என்றெல்லாம் வாய் தவறி உளறி விடுகிறாள்.
இறுதியாக சீதா அடுத்ததாக சமையல் தான் என்று மூன்று பெண்களையும் கூப்பிட, அவர்கள் வர மறுக்க சாட்டை எடுத்து சுழற்றி பயமுறுத்த மகாலட்சுமி ரூமுக்கு ஓடிச்சென்று சீதா தங்களை மிரட்டுவதாக சொல்கின்றனர்.
இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.