Seetha Raman July 18: சீதாவின் கலக்கலான என்ட்ரி.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்!
நேற்றைய எபிசோடில் சுபாஷ் மற்றும் சேதுபதி இருவரும் கஞ்சா வைத்தது பற்றி பேசிய வீடியோ ஆதாரம் சீதாவிடம் சிக்கிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ் மற்றும் சேதுபதி இருவரும் கஞ்சா வைத்தது பற்றி பேசிய வீடியோ ஆதாரம் சீதாவிடம் சிக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சீதா “அவங்க ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போய் மகாவும் அர்ச்சனாவும் அதைப் பார்த்து கஷ்டப்படுறதை நாம பார்க்கணும்” என திட்டம் போட்ட நிலையில், அடுத்ததாக “மீராவுக்கும் சத்தியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று சொல்கிறாள். சத்தியன் “அது எப்படி சாத்தியம்?” என்று கேட்கிறான். நான் பண்ணி வைப்பேன் என்று சீதா வாக்குறுதி கொடுக்க சத்தியன் சந்தோஷம் அடைகிறான்.
மேலும் இந்த ஆதாரத்தை போலீசிடம் “நான் கொண்டு போய் கொடுக்கணுமா?” என்று கேட்க, “இல்ல அதுக்காக தான் அப்பாவ சென்னையில் தங்க சொல்லி இருக்கேன், நீங்க அவரைப் போய் பாருங்க” என்று சொல்லி அனுப்ப, ராஜசேகரை சந்தித்து வீடியோ ஆதாரத்தை கொடுக்க, ”அவர் என் இரண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை கெட்டுப் போக இவங்க தான் காரணமா? கொல்லாம விடமாட்டேன்” என ஆவேசப்படுகிறார்.
ஆனால் “இதை எதுவும் செய்யக் கூடாது, அவர்களை கைது செய்ய வேண்டும்” என சக்தியன் துரை ஆகியோர் சமாதானம் செய்ய, “உடனடியா நான் இதை செய்கிறேன்” என சொல்கிறார். பிறகு சத்யன் மீராவுக்கு போன் செய்து கல்யாண விஷயம் குறித்து சொல்ல, “என் அண்ணன்களோட சம்மதம் இல்லாம கல்யாணம் நடக்காது ” என்று சொல்கிறாள். சத்யன் அதெல்லாம் சீதா பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார் என்று சொல்ல மீராவும் சந்தோஷம் அடைகிறாள்.
அதன் பிறகு வீட்டில் மகா அர்ச்சனா சுபாஷ் சேதுபதி என எல்லோரும் உட்கார்ந்து சந்தோஷமாக டின்னர் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அங்கு வரும் துரை, “எனக்கு என்னமோ சீதா நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவா போல” என்று சொல்ல, இவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இருந்தாலும் சீதாவை பற்றி தரக்குறைவாக பேச அங்கு வரும் ராம் சீதாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான்.
மறுநாள் ஸ்டேஷனுக்குச் சென்று “சீதா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அவ நிச்சயம் தப்பு பண்ணி இருக்க மாட்டா” என்று பேச, இதைக் கேட்டு செல்லம்மா சந்தோஷப்படுகிறார். மறுபக்கம் வீட்டில் மதுமிதா சீதாவை இன்னும் காணவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது சீதா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க, செக்யூரிட்டி “இவ்வளவு நாள் எங்க அம்மா போயிருந்தீங்க? நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்” என்று சொல்ல , மகாவிடம் சென்று நான் வந்திருக்கும் விஷயத்தை சொல்லென சொல்லி அனுப்புகிறாள்.
செக்யூரிட்டியும் உள்ளே ஓடிவந்து சீதா வந்திருக்கும் விஷயத்தை சொல்ல, மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.