Ramayanam Serial: சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் “இராமாயணம்” .. முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்!
வால்மீகி முனிவரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட இராமாயணம் பல இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது.
சன் டிவியில் மே 13 ஆம் தேதி முதல் மீண்டும் இராமயணம் சீரியல் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இராமாயணம், மகாபாராதம் போன்ற இதிகாச தொடர்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு புத்தகங்கள் படிப்பதை போல சுவாரஸ்யமாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
வால்மீகி முனிவரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட இராமாயணம் பல இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது. தமிழில் கூட கம்பர் தன் கற்பனை வளத்தையெல்லாம் சேர்த்து “கம்ப இராமயணம்” ஆக இயற்றியுள்ளார்.கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியை சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இராமயணம் தொலைக்காட்சி தொடர்களாகவும், அதன் ஒரு பகுதி ஒவ்வொரு காலகட்டங்களில் படமாகவும் வெளியாகி வருகிறது.
View this post on Instagram
இராமயணம் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினாலும் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நூலாகவும், கதையாகவும் கேட்டவர்கள் காட்சிகளாக பார்த்தபோது பிரமித்து தான் போனார்கள். இந்தியில் உருவாக்கப்பட்டாலும் டப்பிங் என்ற உணர்வே இல்லாத அளவுக்கு தமிழில் இராமாயணம் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனால் தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த தொடரை எப்போது ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் டிவி முன் எல்லா வேலையையும் விட்டுவிட்டு அமர்ந்து விடுவார்கள்.
சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிய இராமாயணம் வரும் மே 13 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஒளிபரப்பாகிய ஆனந்த ராகம் சீரியல் மதியம் 3 மணி ஸ்லாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் கண்டிப்பாக இராமயணம் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தனக்கென தனியிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Fahadh Faasil: மாமன்னன் ரத்னவேலு கேரக்டரை ரசிகர்கள் சரியா புரிஞ்சுக்கல... - ஃபகத் ஃபாசில் ஓபன் டாக்!