மேலும் அறிய

Marimuthu: அச்சச்சோ ... எதிர்நீச்சல் குணசேகரன் மீது போலீசில் புகார்.. திரையுலகில் பெரும் பரபரப்பு..

இயக்குநரும்,நடிகருமான மாரிமுத்து மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோதிடர்கள் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநரும்,நடிகருமான மாரிமுத்து மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன்

இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இவர் பரியேறும் பெருமாள், பைரவா. தீராக்காதல் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் மாரிமுத்து இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் மிகப்பிரபலம். அதற்கு காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல். இதில் ‘ஆதி குணசேகரன்’ என்ற கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். 

தமிழா தமிழா நிகழ்ச்சி 

இப்படியான நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபல விவாத நிகழ்ச்சியான “தமிழா தமிழா”வில் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் அந்த எபிசோட் ஒளிபரப்பானது. 

இதில் பேசிய மாரிமுத்து, ‘இந்த உலகத்தில் அறிவியல் ரீதியிலான உண்மையும், புவியியல் ரீதியிலான உண்மைகளுமே மட்டுமே உண்மை. ஜோதிடம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். நாம் இந்தியா பின்தங்கி இருக்க காரணமே ஜோதிடர்கள். இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துட்டு போகிறவர்கள் ஜோதிடர்கள் தான்” என ஜோதிடத்தையும், ஜோதிடம் சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். 

அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது. அந்நிகழ்ச்சியில் மாரிமுத்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. 

போலீசில் புகார் 

இந்நிலையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் இணைந்து மாரிமுத்து மீது புகார் அளித்துள்ளனர். அதில், தங்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசிய மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் மகேந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் ஜோதிடர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Embed widget