Ninaithen Vandhai: அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர், எழிலுக்குள் ஏற்பட்ட மாற்றம் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்
எல்லோரும் ரெஸ்டாரண்டுக்கு சாப்பிடப்போக, எழில் குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று கண்டிஷன் போட, சுடர் எழிலிடம் பேசி அவன் மனதை மாற்றுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீம் பார்க்கில் வேலு மற்றும் இருவரும் சந்தித்துக் கொண்ட வேலுவுக்கு எழிலை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த விஷயம் ஞாபகத்துக்கு வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சுடரை தேடி அலைய வேறு பக்கம் இவர்கள் ராட்டினத்தில் சுற்றும் போது அபி சத்தம் போட அதைக் கேட்டு எழில் பதறி அடித்து ஓடி வருகிறான். அதேபோல் சுடரும் பதறி அடித்து ஓடி வர, எழில் எதுக்கு கத்துன என்று கேட்கும் போது, சும்மா ஃபன்னுக்கு என்று சொன்னதும், “சுடர் உயிரைப் பணயம் வைத்து ஓடி வந்திருக்கா” என திட்டுகிறான்.
மேலும் சுடர் குழந்தைகள் மீதும் காட்டும் அக்கறையை பார்த்து எழிலுக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயம் உருவாக தொடங்குகிறது. இதைப் பார்த்து மனோகரி கடுப்பாகிறாள்.
அடுத்ததாக எல்லோரும் ரெஸ்டாரண்டுக்கு சாப்பிடப்போக, எழில் குழந்தைகள் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று கண்டிஷன் போட, சுடர் எழிலிடம் பேசி அவன் மனதை மாற்றுகிறாள்.
மறுபக்கம் வேலு எழிலைத் தேடி பிடித்தால் சுடர் பற்றி தெரிந்து விடும் என தீவிரமாக தேடுகிறான். இப்படியான நிலையில் இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: The Goat Life: பெரியோனே ரஹ்மானே... தி கோட் லைஃப் பாடல் முழு ஆல்பம் ரிலீஸ்! ரஹ்மானுக்கு அடுத்த ஆஸ்கர் ரெடி!