மேலும் அறிய

Neeya Naana: ஷாம்பூவுக்கு பதில் சீயக்காய்: உங்களுக்கு கோபம் வருதா? எனக்கும் வருது...நீயா நானாவில் கடுப்பான கோபிநாத்!

இந்த வாரம் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் “வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்றது.

நீயா? நானா?

பிக்பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத்  தொகுத்து வழங்கி வருகிறார். 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம்  “வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

அதாவது வாங்கும் சம்பளத்தில் செலவுகளை அடக்க முடியுமா? இல்லையா? என்பதுதான் இந்த விவாதத்தின் பொருள். இதனடிப்படையில் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் ஒரு பக்கம், வரவுக்குள் செலவுகளை அடக்க ஐடியா கொடுப்பவர்கள் இன்னொரு பக்கம் என நிகழ்ச்சி சென்றது. 

ஷேம்புவுக்கு பதில் சீயக்காய்:

செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்களின் தரப்பில் இருக்கும் பெண் ஒருவர், "100 ரூபாய் வருது என்றால் 105 ரூபாய்க்கு செலவு ஆகுது. ஒரு 3 ரூபாய் ஷேம்ப்பு கூடு இப்போ 4 ரூபாய் ஆகிவிட்டது.

மேலும், சின்ன சின்ன மளிகை கடைக்கு இப்போ யாரு வராங்க? எல்லாரும் மொத்த விற்பனை கடை, மாலுக்கு சென்றுதான் அனைத்து பொருட்களை வாங்குறாங்க. இதுல எங்கள மாறி சின்ன கடை நடத்துபவர்களுக்கு எங்கிருந்து வருமானம் வரும். நாங்க எங்க சேமிக்க முடியும்?” என்று ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மற்றொரு தரப்பில், ”விலையேற்ற பிரச்சனை என்பது இன்றைக்கு நேற்கைக்கு பிரச்சனை அல்ல. 50 ஆண்டுக்கு முன்னாடி ஒரு ரூபாய்க்கு இருந்த பொருள் 50, 100, 1000 என போயிடுச்சு. ஆனா, இதை எப்படி பிளான் பண்ண முடியும் என்றால் வருமானத்திற்குள்ள கொஞ்சமாவது  சேமிக்க வேண்டும்.  மேலும், உங்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் பாக்கெட்டுகளில் வாங்க கஷ்டமாக இருந்தால் மொத்தமாக ஒரு கேனை வாங்கி வைக்கலாம்.

அதற்கு எதிர்தரப்பில் இருந்த ஒரு பெண், எங்களால மூன்று ரூபாய் கொடுத்து ஒரு பாக்கெட் ஷாம்ப்பூ கூட வாங்க முடியில தான் நாங்க சொல்லிட்டு இருக்கோம். ஆனா இவங்க டப்பா முழுக்க வாங்க வைக்கணும் என்றால் நாங்க எங்கப் போகிறது என்று கேட்க, அதற்கு இன்னொரு நபர், ஆரம்பத்தில் நாம எப்படி பயன்படுத்தினோம்.

அப்ப எல்லாம் சீயக்காயை அரைச்சுதானே பயன்படுத்தினோம். அதுபோல இப்பவும் பயன்படுத்த வேண்டியதுதானே என்று கேட்க, இதை கேட்ட கோபிநாத் கோபமாகி உங்களுக்கு கோபம் வருதா? எனக்கும் கோபம் வருது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget