Meenakshi Ponnunga: பஞ்சாயத்தைக் கூட்டிய புஷ்பா.. வெற்றி வைத்த செக்.. மீனாட்சி பொண்ணுங்க இன்று!
பஞ்சாயத்தில் தோல்வி அடைந்த புஷ்பா உங்களை சும்மா விடமாட்டேன் என்று மீனாட்சியையும் வெற்றியையும் எச்சரித்து விட்டுச் செல்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி வீட்டுக்கு வந்த நீதிமணியை புஷ்பா செருப்பைக் கழட்டி நீதிமணியின் மீது தூக்கி வீசிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, "புஷ்பா இங்கு எதற்காக வந்தாய்?" என்று நீதிமணியிடம் பிரச்னை செய்கிறாள். நீதிமணி “நான் விரும்பும் இடத்தில் இருப்பேன்” என்று புஷ்பாவிடம் கூற வெற்றியும் புஷ்பாவைத் திட்டுகிறான். இதனால் புஷ்பா கோபத்துடன் வெளியேறுகிறாள். அடுத்ததாக நீதிமணி, மீனாட்சி என அனைவரும் கல்கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது ஊர்காரர் ஒருவர் வந்து புஷ்பா மீனாட்சியின் மீது பிராது கொடுத்திருப்பதாக கூறி பஞ்சாயத்துக்கு அழைக்கிறார்.
அடுத்து பஞ்சாயத்தில் நீதிமணி மீனாட்சியின் வீட்டுக்குப் போனது தவறு என்று கண்டித்து மீனாட்சியைத் திட்டுகிறார்கள். அப்போது அங்கே வந்த வெற்றி, முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவதாக ஒரு பெண் எப்படி நீதிமணியை திருமணம் செய்து கொண்டாள். சட்டப்படி முதல் மனைவிக்கு தான் உரிமை அதிகம் என்று சொல்ல, பஞ்சாயத்துகாரர்கள் நீதிமணி விருப்பப்படும் இடத்தில் இருக்கலாம் என்று தீர்ப்பு கூறுகிறார்கள்.
இதனால் பஞ்சாயத்தில் தோல்வி அடைந்த புஷ்பா, “உங்களை சும்மா விடமாட்டேன்” என்று மீனாட்சியையும் வெற்றியையும் எச்சரித்து விட்டுச் செல்கிறாள். பஞ்சாயத்துக்கு வந்து பேசி சுமூகமாக பஞ்சாயத்தை முடித்து வைத்ததற்கு வெற்றிக்கு மீனாட்சி நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறைவடைந்தது.