மேலும் அறிய

Meenakshi Ponnunga: சக்தியை பார்க்க வந்த மாப்பிள்ளையை அடித்து விரட்டிய மீனாட்சி...இன்றைய எபிசோடின் ஹைலைட்ஸ் இதோ..!

மீனாட்சியும் யமுனாவும் கார்த்திக்கின் அம்மா போட்ட கண்டிஷனை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். சக்தி இந்த கல்யாணத்தை நடத்துவேன் என சொல்கிறார்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தியை பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டினர் வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.

முன்னதாக வெற்றியின் முட்டாள் தனத்தால் யமுனா நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் அது தடைபடுகிறது. மாப்பிள்ளை கார்த்திக் திருமணத்தில் உறுதியாக இருக்க இந்த திட்டத்தை கெடுக்க அவரது பெற்றோர் நினைக்கின்றனர். அச்சமயத்தில் கார்த்திக் வீட்டில் சென்று சக்தி மன்னிப்பு கேட்டு திருமணம் நடக்க வேண்டும் என சொல்லும் போது நீ முதலில் திருமணம் செய்தால் இந்த திருமணம் நடக்கும் என கார்த்திக் அம்மா கறாராக சொல்லிவிடுகிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்ன பார்க்கலாம். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

மீனாட்சியும் யமுனாவும் கார்த்திக்கின் அம்மா போட்ட கண்டிஷனை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். சக்தி இந்த கல்யாணத்தை நடத்துவேன் என சொல்கிறார். அதேசமயம் இந்த பக்கம் பீல் பண்ணும் வெற்றியை சரண்யா சமாதானப்படுத்துகிறார். அப்போது போது ரங்கநாயகி பூஜாவுடன் நிச்சயம் பண்ண வெற்றியிடம் சம்மதம் பெறுகிறார். 

இதனையடுத்து மீனாட்சி சாமியிடம் வேண்டும்போது ஜோசியரிடம் இருந்து போன் வருகிறது. அதில் சக்திக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறது என்று மீனாட்சியிடம் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் சிறிது நேரத்திற்கு பிறகு ஜோசியர் மீனாட்சி வீட்டுக்கு வருகிறார்.  சக்தி ஜாதகத்தில் கல்யாண யோகம் வந்துவிட்டது என்றும், இப்பொழுதே நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம் எனவும் ஜோசியர் சொல்கிறார்,

ஆனால் மீனாட்சி யமுனாவுக்கு கல்யாணம் முடிந்த பிறகுதான் சக்தி கல்யாணம் முடிக்க முடியும் என ஜோசியரிடம் சொல்கின்றார். அந்த நேரத்தில் மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் சக்தியை பொண்ணு பார்க்க வருகின்றனர், மாப்பிள்ளை தாமதமாக வருகிறார். வீட்டுக்கு வந்ததும் மாப்பிள்ளை சக்தியை பற்றி வழியில் தவறான விஷயங்களை கேள்விப்பட்டேன் எனக் கூறி அவளைப் பற்றி தப்பாக பேசுகிறார். இதை பார்த்த மீனாட்சி கோவமாக மாப்பிள்ளையை அறைந்து அவர்களை விரட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget