மேலும் அறிய

Meenakshi Ponnunga: புஷ்பா செய்த சதியால் கண் கலங்கி நிற்கும் 3 மகள்கள்...மீனாட்சி எடுத்த முடிவு என்ன?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் தன்னுடைய 3 மகள்களுக்காக சமையல் ஆர்டரை நிறைவேற்ற மீனாட்சி என்ன முடிவு எடுக்கிறார் என்பது இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 

சமையல் வேலை செய்வதற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை சங்கிலி மற்றும் புஷ்பா பணம் கொடுத்து வரவிடாமல் செய்கின்றனர்.  இது புஷ்பாவின் வேலை என்று சாந்தா சொல்ல மீனாட்சி அதிர்ச்சியடைகிறார். மேலும் யார் தயவும் இல்லாமல் தனி ஆளாக தன் 3 பெண்களுக்காக 400 பேருக்கும் தானே சமைப்பேன் என்று சபதம் எடுப்பதோடு மீனாட்சி இரவு முழுவதும் சமையல் வேலைகளை வெறித்தனமாக செய்து முடிக்கிறாள்.

இதற்கிடையில் மீனாட்சியைக் காணாமல் மகள் யமுனா சாந்தாவிற்கு போன் செய்து விசாரிக்கிறாள்.விஷயத்தை சாந்தா சொல்ல, அங்கு மீனாட்சியை தேடி யமுனா, துர்கா இருவரும் வருகிறார்கள். அப்போது மீனாட்சியின் கையில் சமையல் வேலை செய்ததால் ஏற்பட்ட காயத்தை பார்த்து வருத்தம் கொள்கின்றனர். அதேசமயம் ஆட்களை வைத்து மீனாட்சி சமையல் செய்த சாப்பாட்டை எடுத்துச் செல்ல வரும் ஆர்டர் கொடுத்த நபர் மீனாட்சிக்கு தங்கச்சங்கிலியை பரிசாக கொடுத்து செல்கிறார்.

பின்னர் வீட்டுக்கு வரும் மீனாட்சி சக்திக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சக்தி வந்து விடுகிறார். அம்மா சோர்வாக இருப்பதை பார்த்து மற்றவர்களிடம் காரணம் கேட்கிறார். உண்மையை தெரிந்து கொண்ட சக்தி மீனாட்சியின் கைகளை பிடித்து அழுகிறாள். இதனையடுத்து தன் மகள் யமுனாவிற்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் தாம்பாள தட்டுடன் மீனாட்சி நீதிமணியின் வீட்டிற்கு வர புஷ்பா முறைத்து பார்ப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget