Maari Serial: தீபாவிடமிருந்து குழந்தையைத் திருட நடந்த வேலைகள்.. மாரி கொடுத்த ஷாக் - மாரி சீரியல் அப்டேட்
Maari Serial: மாரி அந்தக் குழந்தை வீட்டுக்கு வராமல் சாப்பிட மாட்டேன் என்று சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க வீட்டில் உள்ள எல்லோரும் சமாதானம் செய்ய முயற்சி செய்ய மாரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் தீபாவளி வீட்டில் அவரது தங்கச்சிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க ரவுடிகள் ரெண்டு பேரும் மாறு வேடத்தில் வேடம் போட்டுக்கொண்டு குழந்தையை தூக்க வருகின்றனர். குழந்தையைத் தூக்கி இரண்டு முறை முயற்சி செய்யும் போது கரண்ட் ஷாக் அடிப்பது என ஏதாவது ஒன்று நடக்க குழந்தையைத் தூக்க முடியாமல் போகிறது.
மறுபக்கம் மாரி அந்தக் குழந்தை வீட்டுக்கு வராமல் சாப்பிட மாட்டேன் என்று சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க வீட்டில் உள்ள எல்லோரும் சமாதானம் செய்ய முயற்சி செய்ய மாரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். இங்கே தீபாவுக்கு ஒரு லெட்டர் வர, அதில் தீபாவுக்கு ப்ரொமோஷன் கிடைத்திருப்பதாக தகவல் வந்திருக்க மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். இந்த சமயத்தில் ரவுடிகள் குழந்தையை தூக்கிக் கண்டு வெளியே வர தீபா எதிரே வந்து நின்று ஷாக் கொடுக்கிறாள்.
குழந்தை அழகா இருந்தது, அதனாலதான் கொஞ்ச நேரம் வச்சிருக்கலாம்னு தூக்கிட்டு வந்ததாக சொல்லி சமாளிக்க, தீபா “நானே பாத்துக்கிறேன்” என குழந்தையை வாங்கிக் கொள்கிறாள். அடுத்து எல்லோரும் தூங்கிய பிறகு ரவுடிகள் குழந்தையைட் தூக்க தீபாவுக்கு சந்தேகம் வந்து அவர்களைப் பிடித்து அடித்து துவைத்து ஓட விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!